பணிபுரியும் இடம் சந்தோஷங்கள் நிரம்பியதாகவும், ஜனநாயகத் தன்மை கொண்டதாகவ
top of page

பணிபுரியும் இடம் சந்தோஷங்கள் நிரம்பியதாகவும், ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் இருந்தால், அந்த நிறுவனத்தி


TMD deptல் chief manager ஆக பணி புரிந்த தோழர் குமார் அவர்கள் உடல் நலம் இல்லாமல், கோயம்புத்தூரில் இதய அறுவை சிகிச்சை செய்து இப்போது உடல் நலம் பெற்று வருகிறார்.

எடப்பாடி தாண்டி மேட்டுக்கடையில், ஓய்வு பெற்று வரும் தோழர் குமார் அவர்களை தோழர்கள் மாதவராஜ், அறிவுடைநம்பி, சங்கர், தங்க மாரியப்பன் இன்று சந்தித்து அவர் விரைவில் முழு உடல் நலம் பெற ஆறுதல் சொல்லி வந்தோம்.

தோழர் குமார் பேசக் கூடாது என்று மருத்துவரின் அறிவுறுத்தியதால், அவரது துணைவியாரும், குடும்பத்தாருமே நம்மிடம் பேசினார்கள். அவர்கள் நம் வங்கி மீதும், வங்கியின் நிர்வாகத்தின் மீதும் வெளிப்படுத்திய கருத்துக்கள் பெரும் வலி நிரம்பியதாகவும், வருத்தங்கள் கொண்டதாகவும் இருந்தது.

குடும்பத்தாரின் கவனிப்பாலும் மிகச் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றதாலும் இன்று உடல் நலம் பெற்று வரும் தோழர் குமார் அவர்கள் பணி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டதே, அவர் உடம் நலம் குன்றியதற்கு காரணம் என அழுத்தமாகத் தெரிவிக்கின்றனர்.

தலைமையலுவலகத்தில் பணிபுரியும் போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தோழர் குமார் சரியான நேரத்தில் சாப்பிடக்கூட முடியாமல் அலைக்கழிக்கப்பட்டதும், இரவு 10.30 மணிக்கு மேல்தான் சாப்பிடக் கூடிய நிலையில் இருந்ததும் அந்தக் குடும்பத்தாருக்கு வேதனை அளித்திருக்கிறது. Migrationஐ ஒட்டி சென்னைக்கு அவர் அழைக்கப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இரவு ஒரு மணிக்கு மேல்தான் சாப்பிட முடியும் என்றால் என்ன செய்வது?

இது போதாதென்று, செய்யும் வேலையிலும் மேலிருந்து கடுமையான அழுத்தங்கள். ஓய்வு கேட்டோ, மருத்துவரைப் பார்க்க வேண்டுமென்று லீவு கேட்டாலும் மிகக் கறாராக ஒரு நாள்தான் லீவு என்று வேண்டா வெறுப்பாக லீவு கொடுப்பது எல்லாம் பணி செய்யும் நிறுவனத்தை நரகம் போல கருதத் தோன்றும். அதுவே நோய்களாக வாட்டுகிறது.

பணி புரியும் இடம் சந்தோஷங்கள் நிரம்பியதாகவும், ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் இருந்தால், செய்யும் வேலை மீது ஒரு காதல் வரும். வேலை செய்யும் இடம் பிரியத்திற்குரியதாக இருக்கும்.அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும், சாதனைகளும் மேஜிக் போல பரந்து விரியும்.

இங்கோ எல்லாம் தலை கீழாகவும், நேர் மாறாகவும் இருக்கிறது. அதன் iconஆக தோழர்.குமாரின் உடல் நலமும், அவரது குடும்பத்தாரின் வேதனை தோய்ந்த முகங்களும் நமக்குள் நிறைந்து வாட்டுகின்றன. ஆத்திரம் தருகின்றன.

உலகம் அழகானது.

மனிதர்கள் அருமையானவர்கள்.

எப்போது தோழர்களே?

அப்படி ஒரு சூழல் வெறும் கனவாகி விடக் கூடாது, நனவாக வேண்டும் என்னும் வேட்கையோடு....

S.அறிவுடைநம்பி J.மாதவராஜ்

GS-TNGBOA GS-TNGBWU


28 views0 comments
world-spin-crop.gif
bottom of page