OUR VISION | TNGBOA
top of page
OUR VISION

நிர்வாகங்களுக்கு என்று ஒரு vision இருக்கிறது. அதை இலக்காக நிர்ணயித்து திட்டமாக வரையறுத்து, அவர்களது பணியைச் செய்வார்கள்.

 

அது போல் நம் தொழிலாளர்களுக்கும், அவர்களின் அமைப்புகளான சங்கங்களுக்கும் ஒரு vision வேண்டும்.  

 

அப்படி ஒரு vision-ஐ, agenda-வை தமிழ்நாடு கிராம வங்கியில் இருக்கிற நமது AIRRBEA-வின் இணைப்புச் சங்கங்கள்  சேர்ந்து வரையறுத்திருக்கின்றன.

1

தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் அனைவரும் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

2

தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையானதாகவும், அதிகாரபூர்வமாகவும் இருக்க வேண்டும். வாய்மொழி உத்தரவுகளும், பரிமாற்றங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

3

தமிழ்நாடு கிராம வங்கியின் அனைத்து நிலைகளிலும் பணிபுரிகிறவர்களுக்கான duties and responsibilities தெளிவாக வரையறுக்கப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆபிஸர்கள் பணியை ஆபிஸர்களும், கிளரிக்கல் பணிகளை கிளரிக்கலுமே செய்ய வேண்டும்.

4

மொத்தமுள்ள 637 கிளைகளுக்குமான எல்லைகளை வரையறுத்து 12 மண்டல அலுவலகங்கள் தமிழ்நாடு கிராம வங்கிக்கு அமைக்கப்பட வேண்டும். அதிகாரத்தையும், நிர்வாகப் பணிகளையும் ஓரிடத்தில் குவித்து வைத்துக் கொள்ளாமல் பரவலாக்கப்பட வேண்டும்.

5

வங்கியின் அனைத்து அலுவல்களுக்கும் வங்கியின் அதிகாரபூர்வ தொலைபேசி எண்களே பயன்படுத்தப்பட வேண்டும்.

6

சட்டப்படியான உரிமைகள், ஒப்பந்தப்படியான சலுகைகள் அனைத்தும் தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

7

பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கிகளில் இருந்த better service conditions, better rights, better allowances –கள் தமிழ்நாடு கிராம வங்கியில் நீடிக்கப்பட வேண்டும்.

8

தமிழ்நாடு கிராம வங்கியில் புதிதாகப் பணிக்குச் சேர்கிற ஊழியர்களிடமும், அலுவலர்களிடமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, RRB Staff Service க்கு எதிரான service Bondகளை வாங்கக் கூடாது.

9

தமிழ்நாடு கிராம வங்கியில் ஊழியர்களிலும் சரி, அலுவலர்களிலும் சரி மெஜாரிட்டியாய் இருக்கும் AIRRBEA இணைப்புச் சங்கங்களுக்கு அதற்குரிய மரியாதையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். Staff matters மற்றும் Service Conditionகளை அந்த சங்கங்களோடு தமிழ்நாடு கிராம வங்கி கலந்தாலோசிக்க வேண்டும்.

10

அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்குமான Transfer Policy தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து இறுதி செய்யப்பட வேண்டும். அதனை நிர்வாகமும், சங்கங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

11

பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்களின் combined inter-seniority ஐ தீர்மானிக்கும் பணிக்கு தமிழ்நாடு கிராம வங்கி முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுத்து ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

12

தலைமையலுவலகம், மண்டல அலுவலகங்களில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கியின் அலுவலர்களையும், ஊழியர்களையும் சமமாக அமர்த்தி, தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகம் செயல்பட வேண்டும்.

13

பாண்டியன் கிராம வங்கியில் உருவாக்கப்பட்டிருக்கும் Staff Welfare Fund முறையானது, தமிழ்நாடு கிராம வங்கியிலும் நீடிக்கப்பட வேண்டும்.

14

பாண்டியன் கிராம வங்கியில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கான Medical Claim Scheme தமிழ்நாடு கிராம வங்கியிலும் நீடிக்க வேண்டும்.

15

பெண் ஊழியர்கள், அலுவலர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

16

அனைத்துக் கிளைகளிலும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்துத் தரப்பட வேண்டும்.

17

SC /ST ஊழியர்கள், அலுவலர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

18

அவரவர்க்கான லீவினை அவரவர் எடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கிளையின் வணிகம் மற்றும் பணிகளை முன்னிறுத்தி லீவுகள் மறுக்கப்படக் கூடாது.

19

லீவு வழங்கும் ஏற்பாடுகள் முறைப்படுத்தப் பட வேண்டும். பொது மேலாளர், மண்டல மேலாளர், கிளை மேலாளர்களுக்கு என லீவு வழங்கும் அதிகாரத்தை முறைப்படுத்தவும், பரவலாக்கவும் செய்ய வேண்டும்.

20

ஒவ்வொரு ஆண்டும் பணியிடங்கள் அந்த வருட மார்ச் 31ம் தேதி புள்ளி விபரங்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே Recruitment மற்றும் Promotion-ற்கான effective date என்பது ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் 1ம் தேதியாக இருக்க வேண்டும்.

21

ஒவ்வொரு ஆண்டும் Recruitment, Promtions, Transfer-கள் உரிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

22

தமிழ்நாடு கிராம வங்கியில் போதிய man power இல்லாமல், கிளைகளுக்குத் தேவையான அடிப்படையான infrastructure இல்லாமல் புதிய கிளைகள் திறப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

23

தலைமையலுவலகத்திலும் சரி, கிளைகளிலும் சரி வேலை நேரம் தாண்டி ஊழியர்களும், அலுபலர்களும் பணிபுரிய நிர்ப்பந்திக்கபடக் கூடாது.

24

தற்போதைய பாண்டியன் கிராம வங்கியின் தலைமையலுவலகமும், பயிற்சி மையமும் தமிழ்நாடு கிராம வங்கியின் அலுவல் பணிகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

25

இப்போதைய பாண்டியன் கிராம வங்கியில் தலைமையலுவலகம் இருக்கும் இடத்திலேயே தமிழ்நாடு கிராம வங்கியின் Pension cell நீடிக்க வேண்டும். பாண்டியன் கிராம வங்கியில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலே இருப்பதாலும், பல்லவன் கிராம வங்கியில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

26

Scale V அலுவலர்களுக்கான பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டு, அவர்களே தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளர்களாக பணிபுரிய வேண்டும்.

27

அனுமதிக்கப்பட்ட விதிகள், சட்டங்களின் பிரகாரம் தற்காலிக கடைநிலை ஊழியர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

28

நிரந்தரக் கடைநிலை ஊழியர்கள் வாங்கும் மாத ஊதியத்தில் 30ல் ஒரு பங்கு தற்காலிக ஊழியர்களின் minimum wages ஆக நிர்ணயம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும்.

29

பாண்டியன் கிராம வங்கியில் Business correspondentகள் சங்கமாக ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன் செயல்பாடுகள் இல்லாமலிருக்கிறது. தமிழ்நாடு கிராம வங்கியின் அனைத்து Business correspondentகளும் ஒரே சங்கமாக ஒன்றிணைக்கப்பட்டு, அமைப்பு ரீதியாக அவர்கள் திரள்வதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டவும் வேண்டும்.

30

ஆபிஸர்கள், கிளரிக்கல், மெஸஞ்சர்கள் என அனைத்து தரப்பினரிடம் ஒற்றுமையுணர்வை ஏர்படுத்தி, நாம் அனைவரும் தொழிலாளர் வர்க்கம் என்னும் வர்க்க உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு கிராம வங்கியில் இந்த agendaவை முன்னெடுத்துச் செல்வதுதான் நமது சங்கத்தின் செயல்பாடாக இருக்கும்.

 

தமிழ்நாடு கிராம வங்கியின் தொழிற்சங்க இயக்கத்தின் பாதையாகவும், பயணமாகவும் இதுவே இருக்கும்.

 

இந்த தெளிவோடும், உறுதியோடும் நாம் நமது எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைப்போம்.

 

வாருங்கள் தோழர்களே!

world-spin-crop.gif
bottom of page