காலத்தி னாற்செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
top of page

காலத்தி னாற்செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது


தோழர்களே!


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று வரை 40,263. உலக அளவில் பார்க்கும் போது வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடாக அமெரிக்கா இருக்கின்றது -11,62,049 .கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது புதிய ஆபத்தும் இருப்பதாக ஒரு தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அதேசமயம் இந்த கொரோனா வைரஸ் தொற்று இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் இன்னொருபுறம் எச்சரிக்கை விடுகின்றார்கள்.


சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அதையும் தாண்டி கொரோனா தொற்றுநோய் பல இடங்களில் பன்மடங்காக உயர்ந்து கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் சென்னையில், மதுரையில் அதிக அளவு பாதிப்பு இருப்பதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.


சில இடங்களில் வேலையின்மை காரணமாக, தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பல கஷ்டங்களை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புலம் பெயர்வது இப்பொழுதெல்லாம் நடந்தே செல்ல வேண்டிய சூழலாய் இருக்கின்றது. அவ்வாறு செல்லும் பொழுது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு என்று வரும்பொழுது ஏகப்பட்ட தொந்தரவுகளை அவர்கள் தினமும் சந்தித்துக் கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல், தூங்குவதற்கு கூட இடம் இல்லாமல் ரோட்டிலேயே இரவு முழுவதும் படுத்து, காலையில் எழுந்து மறுபடியும் நடந்து அவர்களுடைய இருப்பிடத்தை நோக்கி செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழலில் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் செலுத்தப்பட்டவர்கள் போல் சென்று கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கின்றது . இன்னொருபுறம் இதற்கு தடுப்பு மருந்து இன்னமும் சரிவர கண்டுபிடிக்கப் படாதது அச்சத்தை உருவாக்குகிறது.


கொரோனா பாதிப்பிலிருந்து உலகைக் காக்க களத்தில் நின்று பாடுபடும் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் , காவலர் உள்ளிட்ட அனைவரின் தொண்டுணர்வு சாதாரண வார்த்தைகளில் பதிவிட முடியாது. பல இடங்களில் உயிரை பணயம் செய்து தியாகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்; அதேபோன்று வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு சிக்குண்டு இருக்கிறார்கள். நம் நாட்டில் சில கூலி வேலை செய்பவர்கள் இத்தனை நாட்கள் வேலைக்குச் சென்ற இடத்தில் வேலை இல்லாத காரணத்தினால், சோற்றுக்குக் கூட வழியில்லாமல் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்ற கணக்கில் அவர்கள் இடம்பெயர்ந்து எந்தவித போக்குவரத்து வசதி இல்லாமல் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர். இதை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட நாம் செய்தித்தாள்களில் வழியாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கொடுமையிலும் கொடுமையாக பலர் இந்த நேரத்தில் இறந்து கொண்டிருப்பதுதான் மிகவும் மனதை தைக்கும் விஷயமாக நடந்து கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்கள் நீடிப்பு என்ற தகவல் பலரது நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது .நாட்டில் கொரோனா வைரஸ் தொடக்க நிலையில் இருந்தபொழுது பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருபத்தொரு நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தினார் .அதன்படி மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 14ஆம் தேதி மறுபடியும் வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மீண்டும் அறிவித்தார் .இப்பொழுது மத்திய அமைச்சகம் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கிறது என்று அறிவித்திருக்கின்றது. இதன் காரணமாக ரயில், விமான சேவை, பயணிகள் பேருந்து இயக்கப்படாது; பள்ளி ,கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் ; வர்த்தக வளாகங்கள், திரையரங்குகள் , இதர பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடியே இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.


கொரோனா வைரஸ் தொற்று நோயை விட மோசமானது பஞ்சம். இப்பொழுது நமது நாட்டில் அந்த தொற்றுநோய் பயத்தை விட பஞ்சத்தால் ஏற்பட்ட பயம் கொண்டவர்களே அதிகமாகி வருகின்றனர். இது நம் நாட்டின் மிக மோசமான நிலைமையாக பார்க்க வேண்டியுள்ளது. டிமானிடைசேஷன் நேரத்திலேயே ஒரு விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்தோம் -'சொந்த நாட்டிலேயே அகதிகளாக நம்மை இந்த அரசாங்கம் நடத்துவதற்கான சூழ்நிலை வரும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்பதே. இப்பொழுதும் அதே தான் நடந்து கொண்டிருக்கின்றது. வைரஸ் தொற்று நோய் பிரச்சினை காரணமாக முழுவதுமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உதவுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியே? சில மாநில அரசுகள் தங்களுடைய சொந்த முயற்சியின் காரணமாக இந்த தொற்று நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டு வருகின்றன. இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த நாட்டில் பலபேர் இருக்கின்றனர்.


கன்னியாகுமரியில் பணியில் இருக்கின்ற ஒருவர் காஷ்மீரில் இருக்கும் ஒருவருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நாம் இருக்கிறோம். காரணம் -நாம் AIRRBEA வழிவந்தவர்கள்.


அதே போன்று நமக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை அதிகமாகவே உண்டு. காரணம் - நாம் AIRRBEA வழிவந்தவர்கள்.


எனவே நமது சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, தாங்கள் அளிக்கும் இந்த சிறு பங்களிப்பு (ஒரு நாள் ஊதியம்) என்பது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு நபரின் வயிற்றுப் பசியை ஆற்றும் என்ற நம்பிக்கையில் முழுமனதோடு செய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.

'காலத்தி னாற்செய்த உதவி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது' என்று சொல்வதைப் போல் நாம் நடந்து கொள்ள வேண்டிய சூழல் இது.


அனைவரது பங்களிப்பும் நூறு சதவீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்த பங்களிப்பை விரைந்து ஒவ்வொருவரும் அளிக்க வேண்டும் என்று தோழமையுடன் மீண்டுமொருமுறை கேட்டுக்கொள்கிறோம்.


ஊழியர்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் TNGBWU A/C க்கும் ஆஃபிஸர்ஸ் அசோஷியேஷன் சார்ந்தவர்கள் TNGBOA. A/C க்கும் உடனடியாக தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை அனுப்பி வைத்து இந்த பங்களிப்பின் மூலம் நமது ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டுகிறோம்.


WORKERS UNITY - ZINDABAD!

WORKING CLASS UNITY - ZINDABAD!!


TNGBWU A/c No. - 10069519987

TNGBOA A/c No. - 10069520255


39 views0 comments
world-spin-crop.gif
bottom of page