Anti-Employee and Unlawful Act of TNGB Management – 6
top of page

Anti-Employee and Unlawful Act of TNGB Management – 6



ஒரு நிறுவனத்தில் மாதா மாதம் நம்மைப் போன்று சம்பளம் வாங்குவது மட்டும் Wages இல்லை. அது மட்டுமே wages act-ல் cover ஆகாது. அந்த நிறுவனத்தில் temporaryயாக, casual ஆக, contract ஆக வேலை பார்க்கும் யார் வாங்கும் கூலியும் wages என்றே கருதப்படும். அவையெல்லாம் wages actல் cover ஆகும்.


அப்படி வழங்கப்படும் wages யாவற்றுக்கும், Wages Act பிரகாரம் முறையான registerகள் பராமரிக்கப்பட வேண்டும். கணக்கு காட்ட வேண்டும்.


ஆனால் நம் தமிழ்நாடு கிராம வங்கியில் என்ன நடக்கிறது?


தமிழ்நாடு கிராம வங்கியில் மொத்தமுள்ள 632 கிளைகளில், 10 மண்டல அலுவலகங்களில், தலைமை அலுவலகத்தில் மொத்தமே 56 பேர்தான் நிரந்தர Office Attendantகள்தாம் பணிபுரிகின்றனர். மீதி 600க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். இது வங்கியின் சேர்மன் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கு அப்படி ஒருவர் கூட பணிபுரியாதது போல நிர்வாகம் மறைக்கிறது. அவர்களுக்கு ஊதியத்தை நேரிடையாக வழங்காமல், மேனேஜர் மூலம் வேறொரு Head Of account-ஐக் குறிப்பிட்டு வழங்க வைக்கிறது.


ஆக அவர்களுக்கு வழங்கப்படும் wagesக்கு முறையான கணக்கு இல்லை. தேவையான Register இல்லை. இதன்படி நிர்வாகம் வருடா வருடம் தயாரிக்கும் annual Report கூட உண்மையாகாது.


இது எவ்வளவு பெரிய மோசடி. எவ்வளவு வெளிப்படையாக சட்டத்தை மீறும் செயல்.


இப்படி உண்மையை மறைப்பது, முறையான கணக்கு காட்டாதது, தேவையான ரெக்கார்டுகள் ரிஜிஸ்டர்களை பராமரிக்காதது எல்லாம் wages act பிரகாரம் கடும் குற்றமாகும்.


Wages Actன் பிரகாரம்- இந்த குற்றங்கள் செய்கிறவர்களுக்கு கடும் அபராதங்கள் விதிக்கப்படும். அபராதங்கள் போக ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கும் கூட விதிகள் இருக்கின்றன.


(தொடரும்)



29 views0 comments
world-spin-crop.gif
bottom of page