முந்தைய பாண்டியன் கிராம வங்கியில் 2012, 2013 ம் ஆண்டுகளில் கிளர்க்காக பதவி உயர்வு பெற்ற 81 மெஸஞ்சர்த் தோழர்களுக்கு, ஏற்கனவே அதிகமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறி, 10 வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்திய 2015ம் ஆண்டு, சம்பளப் பிடித்தம் செய்ய நிர்வாகம் முன்வந்தது. நாம் லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். லேபர் கமிஷனர் முன்னிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து, லேபர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த 81 தோழர்களில் சிலர் ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெறுகிற வேளையில், பாண்டியன் கிராம நிர்வாகம் அவர்களது Retirement benefit -களிலிருந்து, பிடித்தம் செய்ய முற்பட்டது. நாம் லேபர் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அப்படி பிடித்தம் செய்யக் கூடாது என்றோம். பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அதிலிருக்கும் சட்டரீதியான நிபந்தனையை ஒப்புக்கொண்டு பிடித்தம் செய்ய வேண்டிய தொகையை அந்தத் தோழர்களின் பெயரில் வங்கியில் டெபாசிட் போட்டு lien செய்தது. லேபர் கோர்ட்டு தீர்ப்பைப் பொறுத்து அந்தப் பணத்தை நிர்வாகம் பிடித்தம் செய்வதா அல்லது, பிடிக்காமல் கொடுப்பதா என்று முடிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடாக அந்த டெபாசிட் இருந்தது.
ஆனால் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அப்படி டெபாசிட் செய்யாமல், ஓய்வு பெற்றவர்களிடம் இருந்து, அவர்களது retirement benefitகளில் இருந்து பிடித்தம் என்ற பேரில் பிடுங்கிக் கொள்கிறது. நாம் இது குறித்து CM – HRMயிடம் பேசினோம். சேர்மனிடம் பேசினோம். ஆனால் நிர்வாகம் சட்டத்துக்கு[ப் புறம்பாக பிடித்தம் செய்து கொண்டே இருக்கிறது.
குறைந்த பட்சம் நியாயம், தர்மம் எதுவும் இந்த நிர்வாகத்துக்கு கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
(தொடரும்)
Comments