Anti-Employee and Unlawful Act of TNGB Management – 4
- TNGBOA AIRRBEA
- Sep 25, 2020
- 1 min read

Maternity Benefit Act, 1961ன் பிரகாரம் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பேறுகாலத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்களாக, இரண்டு முறை மொத்தம் 12 மாதங்கள் லீவு எடுத்துக் கொள்ளலாம். அந்த லீவுக்கு நிர்வாகம் உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறது சட்டம். Probation periodஐப் பற்றி எதுவும் அந்த Actல் சொல்லப்படவில்லை.
நமது Tamil Nadu Staff Service Regulationல் maternity leave சொல்லப்பட்டுள்ளது. எந்த சர்வீஸ் ரெகுலேஷனும் அந்த Maternity Benefit Actற்கு உட்பட்டுதான் விதிகளை நிர்ணயிக்க முடியும். அதிலும் probation period பற்றியெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆனால் தமிழ் நாடு கிராம வங்கியில் Probation Periodல் maternity leaveல் சென்ற சிலருக்கு அந்த மாதங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே பேசி விட்டோம். கடிதம் எழுதி விட்டோம். நிர்வாகம் அழிச்சாட்டியமாய் சம்பளத்தை கொடுக்காமல் இருக்கிறது.
ஆக - TNGB நிர்வாகம் Materntiy Benefit Act ஐயும் மதிக்கவில்லை.
நிர்வாகமே போர்டில் வைத்து வெளியிட்ட TNGB Staff Regulationஐயும் மதிக்கவில்லை.
(தொடரும்)
Comentários