ஒழுங்கு நடவடிக்கைகளில் குற்றச்சாட்டு சுமத்தி, சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டு, விசாரணை நடைபெற்று, குற்றம் நிருபீக்கப்பட்டால் மட்டுமே தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் நாடு கிராம வங்கியில் ஒருவருக்கு சார்ஜ் ஷீட் வழங்கப்பட்டாலே, அவருக்கு வழங்கப்பட வேண்டிய stagnation increment-களை நிறுத்தி விடுகிறது நிர்வாகம். இப்படியொரு விதி எங்குமே இல்லை. இப்படி ஒரு அநியாயத்தை எங்குமே கேள்விப்பட்டதில்லை. ஆனால் தமிழ்நாடு கிராம வங்கியில் இது அப்பட்டமாக,சட்ட விரோதமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் நம் சங்கத் தோழர் சாத்தூரப்பனுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டவுடன் நாம் நிர்வாகத்திடம் பேசினோம். CM – HRM அதற்கான Rule அவரிடம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன Rule என்று கேட்டால் சொல்ல மாட்டேன்கிறார்.
அதன் பின்புதான் இன்னொரு விஷயம் தெரிய வந்தது. AIBEA இணைப்புடன் TNGBEA சங்கத்தின் பொதுச்செயலாளராக தன்னை முன்னிறுத்திய பாலாஜி பாலகிருஷ்ணனுக்கு , அவர் ஜூன் மாதம் ஓய்வு பெற்ற போது, ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த stagnation increment ஐ நிறுத்திய வகையில் ஏறத்தாழ மூன்று லட்சத்து இருபதாயிரத்தை அநியாயமாக அவரது retirement benefit-லிருந்து நிர்வாகம் பிடுங்கி இருக்கிறது. பாலாஜி பாலகிருஷ்ணன் மாற்று சங்கத்தவராய் இருக்கலாம், நம்மீது வெறுப்பும் எதிர்ப்பும் கொண்டு இருந்திருக்கலாம். அது வேறு. ஆனால் இந்த வங்கியில், இந்த நிர்வாகத்தால் அநியாயமாக ஒரு ஊழியர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற வகையில் நாம் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கையை எதிர்க்கிறோம்.
நாம் இதுகுறித்து கோரிக்கை வைக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கையும், ஸ்தாபன ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதன் மூலம் சாத்தூரப்பனுக்கு மட்டுமல்ல, பாலாஜி பாலகிருஷ்ணனுக்கும் நியாயம் கிடைக்கும்.
(தொடரும்)
Comments