top of page

கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கி மேலாளருக்கு பணிநிறைவு பாராட்டு


கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கி மேலாளருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு கிராம வங்கி மேலாளராக பணியாற்றிய அலெக்சாண்டர், நேற்றுடன் (30.06.2019) பணி நிறைவு பெற்றதையடுத்து, இவருக்கு வங்கி பணியாளர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் தீபம் நண்பர்கள் குழாம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி தமயந்தி மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல மேலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். தீபம் நண்பர்கள் குழாம் ஒருங்கிணைப்பாளரான தமிழ்நாடு கிராம வங்கி அடரி கிளை மேலாளர் அருணஜடேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மார்கிரட் அலெக்சாண்டர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர்கள் விழுப்புரம் பழனி, தர்மபுரி பழனிவேல், வெங்கட்ராமன், ரமேஷ்வாசன், ரெட்டணை முருகன், செங்கல்பட்டு வள்ளுவன், சங்கராபுரம் சீனிவாசன், சின்னசேலம் மோகன்ராஜ், நயினார்பாளையம் அருண்குமார், வாணாபுரம் ராமன், எலவனாசூர்கோட்டை வினோசந்திரன், வங்கி வழக்கறிஞர் கோகுல்தாஸ், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்க இணை இயக்குனர் லுார்து ஆரோக்கியதாஸ், பணியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், டாக்டர்கள் சேவியர், ரங்கராஜன், கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் சக்திகிரி, கள்ளக்குறிச்சி கிளை துணை மேலாளர் பிரபாகரன், கேஷியர் ஷீலாராணி, அப்ரைசர் இளஞ்செழியன், பணியாளர் சதீஷ்குமார் வாழ்த்தி பேசினர். மேலாளர் அலெக்சாண்டர் ஏற்புரை வழங்கி, நன்றி கூறினார்.


コメント


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page