புதுவை பாரதியார் கிராம வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு வரை நான்கு கிளைகளில் ஒரு ஆபிஸர் மட்டுமே பணி புரிந்து கொண்டிருந்தனர். அவருக்கு ஆபிஸர் பாஸ்வேர்டும் கொடுக்கப்பட்டு இருக்கும். கிளரிக்கல் பாஸ்வேர்டும் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுபோல் இரண்டு சாவிகளும் கொடுக்கப்பட்டு இருக்கும். நாம் இதனை அனுமதிக்க முடியாது என அந்த நிர்வாகத்திடம் மாநில அமைப்பின் சார்பில் பேசினோம். நபார்டில் முறையிட்டோம். பலனில்லை. எனவே நாம் புதுவையில் அதன் தலைமையலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, இன்னும் ஒரு வாரத்துக்குள் சரி செய்யப்படாவிட்டால், ஆபிஸர்கள் தங்களிடம் இருக்கும் கிளரிக்கல் சாவிகளை சேர்மனிடம் கொண்டு வந்து ஒப்படைப்போம் என அறைகூவல் விடுத்தோம். அதன் பிறகு அவசரம் அவசரமாக சில ஏற்பாடுகள் செய்து ஆபிஸர்கள் இரண்டு சாவிகளையும் வைத்திருக்கும் வழக்கத்தை கை விட்டது. அதன் பிறகு லீவு நாட்களில் recovery செல்ல வேண்டும் என்றும், deposit canvassing செல்ல வேண்டும் என அந்த நிர்வாகம் வலியுறுத்தியது. அதற்கு செல்ல வேண்டாம் என மாநில அமைப்பின் சார்பில் அறிவுறுத்தினோம். அங்குள்ள சங்கமும் அதையே நிர்வாகத்திடம் சொல்லி விட்டது. தொடர்ந்து நிர்வாகத்தின் அராஜகங்களுக்கும், உழைப்புச் சுரண்டல்களுக்கும் உடன்பட மறுத்ததால் இப்போது அங்குள்ள ஆபிஸர்களை அங்குமிங்குமாய் டிரான்ஸ்பரில் பந்தாடி, தன் வன்மத்தையும், பழி வாங்கும் போக்கையும் கடைப்பிடித்துள்ளது நிர்வாகம், வரும் 13ம் தேதி Review meeting நடத்த ஆபிஸர்களை அழைத்துள்ளது. அதாவது மிரட்டி ஆபிஸர்களை அடிபணிய வைக்க நினைக்கிறது. அடிபணிந்து விடாதீர்கள், நாங்கள் தமிழ்நாடு கிராம வங்கியின் தோழர்கள் உங்களோடு இருக்கிறோம் என அவர்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறோம். Review Meeting நடத்த இருக்கிற 13ம் தேதி ஆர்ப்பாட்டமோ, உண்ணாவிரதமோ நடத்தலாம் என திட்டமிட்டோம். தேர்தல் நேரமென்பதால் காவல்துறை அனுமதியளிக்க மறுத்துள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை AIRRBEA தலைமையுடன் ஆலோசித்து திட்டமிடுவோம். இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அராஜகம் உச்சத்தில் இருப்பது புதுவை பாரதியார் கிராம வங்கியில். அதற்கு அடுத்து இருந்தது முந்தைய பல்லவன் கிராம வங்கியில். இனி எல்லாவற்றையும் நம் சங்கங்களின் முயற்சியால் மாற்றியாக வேண்டும், சரி செய்தாக வேண்டும்.
General Secretary
AIRRBEA TN & PUDUVAI