top of page

இருதரப்புப் பேச்சுவார்த்தையில் Fractured Mandate-ற்கு ஆதரவாக AIRRBEA ஒருபோதும் இருக்காது


நடந்து கொண்டிருக்கும் 11 வது இருதரப்புப் பேச்சுவார்த்தையில், ஆபிஸர்களில் Scale-IIIக்கு மேல் ஊதியம் குறித்து பேசத் தேவையில்லை எனவும் Scale IVக்கு மேல் அந்தந்த வங்கிகளே முடிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் IBA ஒரு நிலைபாடு எடுத்திருக்கிறது. இதைத்தான் fractured mandate என்கிறார்கள். இந்த முடிவுக்கு எதிராக AIBOCகும், NOBOவும் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன. ஆபிஸர்கள் மீது தொடுக்கப்படும் இந்த கடும் நெருக்கடிக்கு எதிராக Composite சங்கங்கள் என்ன செய்தன. "Award Staff நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். ஆபிஸர்கள் நலன் பற்றி கவலை இல்லை". இப்படியொரு குற்றச்சாட்டை பல்லவனில் இருக்கும் AIBOC இணைப்புச் சங்கம் முன்வைத்து பதிவுகள் செய்கிறது. சர்க்குலர் விடுகிறது.

மொத்த விஷயத்திலும், சம்பந்தமே இல்லாமல் Composite சங்கங்களை இணைத்து பழியை அவர்கள் மீது போடுகிறது.

முதலில் இது குறித்து சில அடிப்படையான தகவல்களை தோழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை நடப்பது வணிக வங்கி ஊழியர்கள் & அலுவலர்களின் பேச்சு வார்த்தையில்.

அதில் கலந்து கொண்ட சங்கங்கள் எதுவும் composite சங்கங்கள் கிடையாது. ஒன்று Award Staff Union ஆக இருக்கும். அல்லது Officers union ஆக இருக்கும்.

IBAவின் இந்த நிலைபாட்டிற்கான நோக்கம் Officer களை deunionise செய்வதே. ஸ்கேல் நான்கிற்கு மேல் அந்தந்த வங்கி நிர்வாகங்கள் ஊதியத்தை நிர்ண்யிக்கும் என்றால், ஸ்கேல் நான்கிற்கு மேல் உள்ளவர்கள் deunionise ஆவார்கள். ஏற்கனவே அவர்கள் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளாமல் போவது இப்போதே நடக்கிறது. இனி ஸ்கேல் மூன்றில் இருக்கும் ஆபிஸர்களும் deunionise ஆவார்கள். IBAவின் இந்த நிலைபாட்டை எதிர்த்து AIBOC போர்க்குரல் எழுப்பியது மிகச் சரி. தொழிற்சங்கப் பார்வையுள்ள அனைவருமே இவ்விஷயத்தில் AIBOC-ன் நிலையை ஆதரிக்கவேச் செய்வார்கள்.

பேச்சுவார்த்தையில் இன்னொரு ஆபிஸர் யூனியனான AIBOO சங்கம் வெளிநடப்புச் செய்யவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

இந்த fractured mandateக்கு ஆதரவாக 5 வங்கி நிர்வாகங்கள் முடிவு தெரிவித்திருக்கின்றன. அதில் ஒன்று இந்தியன் வங்கி என்பதையும், அங்கு AIBOC இணைப்பில் இருக்கும் சங்கமே மெஜாரிட்டி சங்கம் என்பதையும் தோழர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த fractured mandate-ஐ எதிர்த்து AIBOC போராட்டத்தில் இறங்கியது. அந்தப் போராட்டத்தை BEFI ஆதரித்தது. ஆனால் கோரிக்கைகளில் ‘கிராம வங்கிகளை வணிக வங்கிகளோடு இணைக்க வேண்டும்’ என்பதும் ஒரு கோரிக்கையாக இருந்ததால் BEFI அந்த போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.

வணிக வங்கிகளில் நடக்கும் இந்தப் பிரச்சினையை இப்போது இங்கு வந்து AIRRBEA வுக்கு எதிராக ஏன் பல்லவனில் இருக்கும் AIBOC இணைப்புச் சங்கம் ஏன் பிரச்சாரம் செய்கிறது என்று தெரியவில்லை.

இருதரப்புப் பேச்சுவார்த்தையில் AIRRBEA ஒரு party-யே கிடையாது. மேலும் fractured mandate-ற்கு ஆதரவாக AIRRBEA-ஒரு போதும் பேசவில்லை. பேசவும் செய்யாது. பிறகு ஏன் AIRRBEA மீது சம்பந்தமில்லாமல் சேற்றை வாரி இறைக்கிறது Pallavan GBOA?

இன்னும் சொல்லப் போனால் இங்கு எந்த சங்கமும் Composite சங்கங்கள் இல்லை. பாண்டியனில் PGBWUவும், PGBOAவும் தனித்தனி சங்கங்களே. PGBWU சங்கம் Award Staffன் நலனை முன்னிறுத்தும். PGBOA சங்கம் Officer நலனை முன்னிறுத்தும். இந்த இரண்டுக்கும் இடையில் co-ordination உண்டு. அதுபோலத்தான் பல்லவனிலும் PGBEUவுக்கும், PGBOUவுக்கும் இடையில் co-ordination உண்டு. தத்தம் உறுப்பினர்கள் நலனை அந்தந்த சங்கங்கள் ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. Fractured mandate-ல் இந்த சங்கங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறது Pallavan GBOA?

Officerகளை deunionise செய்ய முயலும் Fractured mandateற்கு எதிராக நாம் அனைவருமே ஒன்று திரள்வோம். அதில் எங்களுக்கு ஒரு போதும் சமரசம் இல்லை. நம் கோபம், எதிர்ப்பு, போராட்டம் அனைத்தும் IBAவுக்கும், அதிகார அமைப்புக்கு எதிராக கூர் படுத்தப்பட வேண்டும்.

தேவையில்லாமல் Composite சங்கம் என சக தொழிற்சங்கம் மீது பாய்ந்து, எதிரிகளை தப்ப விடக் கூடாது.

தானும் புரியாமல், மற்றவர்களையும் புரிய விடாமல் எதாவது குழப்பிக் கொண்டே இருப்பதுதான் Pallavan GBOA போலும்!


12 views0 comments
world-spin-crop.gif
bottom of page