திருநெல்வேலி, தூத்துக்குடி-உறுப்பினர் சந்திப்புக் கூட்டம்


தோழர்களே!

அகில இந்திய மாநாட்டிற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. மிக விரிவான அளவில் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிளைகளுக்கு அழைப்பிதழ்கள், போஸ்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளோடு பல்வேறு புதிய புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கிற இந்தக் காலத்தில், நமது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. நம் எதிர்காலம் குறித்த திசைகளை அறிகிற, பயணத்தை தீர்மானிக்கிற நிகழ்வாக, மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே மாநாடு குறித்து விரிவாக அறிய, மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து தெளிவு பெற, மாநாட்டின் ஏற்பாடுகளுக்கு மேலும் சிறப்புகள் சேர்க்க PGBWUவும், PGBOAவும் இணைந்து உறுப்பினர் சந்திப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே மதுரையில் கடந்த 4.11.2017 அன்று உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் 11.11.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஓட்டல் லாரா பாரடைஸில் (திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிர்புறம்) உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே தேதியில், தூத்துக்குடியில் மாலை 6 மணிக்கு ஒட்டல் CITY TOWERSல் (எட்டையபுரம் ரோடு கிளை அருகே) உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சங்கத் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வாருங்கள்! நேரில் சந்திப்போம்!!

தோழமையுடன்

J.மாதவராஜ் S.நடராஜன்

GS – PGBWU GS – PGBOA