18.10.2020 அன்று நடந்த TNGBOA & TNGBWU சங்கங்களின் செயற்குழுக் கூட்டங்கள்
top of page

18.10.2020 அன்று நடந்த TNGBOA & TNGBWU சங்கங்களின் செயற்குழுக் கூட்டங்கள்



தோழர்களே!


வணக்கம்.


18.10.2020 அன்று TNGBOA & TNGBWU சங்கங்களின் செயற்குழுக் கூட்டங்கள் திருச்சியில் நடைபெற்றது. இந்த கோவிட் 19 நேரத்திலும் நம் செயற்குழ் தோழர்கள் திரளாக பங்கு கொண்டதும், முக்கியமான கீழ்கண்ட முடிவுகள் எடுத்ததும் சிறப்பான அம்சம்.


1) மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து நவம்பர் 26ம் தேதி நடக்க இருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்குவது.


2) 2021, ஜனவரி 9, 10 தேதிகளில் சேலத்தில் நமது இரு சங்கங்களின் மாநாடுகளை உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் நடத்துவது. முதல் நாளில் பொது மாநாட்டையும், அடுத்த நாள் பிரதிநிதிகள் மாநாட்டையும் நடத்துவது.


3) நம் தமிழ்நாடு கிராம வங்கியின் நிலைமைகளும், நிர்வாகத்தின் உத்திகளும், வங்கியின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் உகந்ததல்ல என நமது இரு செயற்குழுக்களும் உறுதியாக கருதின.


(i) ஏறத்தாழ 2000 பேர் ஆட்பற்றாக்குறையில் வங்கி செயல்படுகிறது. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் பணிபுரிகின்றனர். உரிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியவில்லை.


(ii) நமது வங்கியின் வணிகம் பல பகுதிகளில் NGOக்களை நம்பியே இருப்பது ஆபத்தான விஷயம். அவர்களுக்கு வங்கியிலிருந்து டொனேஷன் வழங்கப்படுவது, அவர்களின் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது என மேலும் கேள்விப்படும் விஷயங்கள் அச்சுறுத்துகின்றன.


(iii) நெட் கனெக்ட்டிவிட்டி அடிக்கடி போய் விடுகிறது. சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படவில்லை. ஏ.டி.எம் கார்டுகள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. பல கிராம வங்கிகள் மொபைல் பேங்கிங்கை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும்போது, நாம் நெட் பேங்கிங்கிற்கு கூட வழியில்லாமல் இருக்கிறோம். இதனால் நாம் கணிசமாக நமது சேவைகளால் ஈர்க்க வேண்டிய வாடிக்கையாளர்களை இழந்து வருகிறோம்.


(iv) கிராம வங்கிகளின் எளிய வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான வட்டியும், அபராதங்களும் சுமத்தப்படுகின்றன.


(v) தொழிலாளர் சட்டங்களை, டிரியூப்னல் தீர்ப்புகளை, நீதிமன்ற உத்தரவுகளை மீறுகிற, அவமதிக்கிற காரியங்களை நிர்வாகம் தொடர்ந்து செய்கிறது. இது ஒரு முன்மாதிரியான வங்கி கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களாக இல்லை.


(vi) பாலின பாகுபாட்டை தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. ஆண்களுக்கு முன்னுரிமை கொடுத்து தற்காலிக ஊழியர்களாக பணிக்கு அமர்த்துங்கள் என்று எழுத்துபூர்வமாக சர்க்குலர் வெளியிடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பணி நியமனம் செய்யப்படுவதில், முரண்பட்ட விதிகளை service bond ல் புகுத்துகிறது. பெண் ஊழியர்களுக்கு Internal Complaint committee களை regional levelல் அமைக்க மறுக்கப்படுகிறது.


(vii) வங்கி செயல்படுவதற்கான அடிப்படையான Book of instructions இன்னும் இறுதி செய்யப்பட்டு வங்கியில் வழங்கப்படுகிறவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.


(viii) வங்கியில் பணிபுரிகிறவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் இருக்க வேண்டிய Duties and responsibilities இன்னும் வரையறுத்து அறிவிக்கப்படவில்லை.


(ix) விருதுநகரில் விரிந்து பரந்த சொந்தக் கட்டிடம் இருக்கும் போது, சேலத்தில் வங்கியின் தலைமையலுவலகம் விரிவுபடுத்தப்படாமல், வாடகைக்கு செயல்படுகிறது. வங்கியின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.


(x) அனைத்து நிலைகளிலும் வங்கியில் பணிபுரிகிறவர்களுக்கு எந்தவிதமான டிரெய்னிங்கும் வழங்கப்படுவதில்லை. அதே சமயத்தில் staff accountability ஐ நிர்ணயித்து அலுவலர்களின் பணிக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இது வங்கியின் வணிகத்தை கடுமையாக பாதிக்கும்.



இவை யாவும் நம் வங்கியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதால், நாம் SAVE_TAMILNADU_GRAMA_BANK என்னும் இயக்கத்தை ஆரம்பித்து நம் வங்கியை மோசமான நிலைமைகளிலிருந்து மீட்கும் இயக்கத்தை தொடங்குவது.


இந்த மூன்று முடிவுகளையும் விளக்கி நாம் அனைத்து மண்டலக் கூட்டங்களை உடனடியாக நடத்த இருக்கிறோம். அதற்கான தேதியும், இடமும் தோழர்களுக்கு விரைவில் தெரியப்படுத்தப்படும்.


தோழமையுடன்


J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS-TNGBOA





19 views0 comments
world-spin-crop.gif
bottom of page