top of page

வேலை நேரம் முடிந்த பின்பு நாம் செய்யாத ஒரு விஷயத்திற்காக யாரும் மீண்டும் கிளைக்கு செல்ல தேவையில்லை


தோழர்களே

18.11.2019 அன்று மதுரையில் உள்ள அரசரடி கிளையில் மாலை 5 மணிக்கு முறையாக GL Difference பார்த்து அது 0.00 என்று உறுதி செய்துவிட்டு EOD போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

பின்னர் சுமார் 6.30 மணி அளவில் கிளை மேலாளருக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து GL Difference 2 லட்சம் இருப்பதாகவும் அதை உடனடியாக வந்து சரி செய்யுமாறும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளனர். பின்னர் அந்தக் கிளையின் அலுவலருக்கு மண்டலத்திலிருந்து தொடர்புகொண்டு GL Difference இருப்பதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதற்கு அந்த அலுவலர் கிளையில் EOD போடும்போது GL Difference இல்லையெனவும் அதற்குப் பிறகு Difference எப்படி வரும்? அப்படியே வந்தாலும் தற்சமயம் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதால் நாளை காலை வந்து பார்ப்பதாக கூறி உள்ளார்.

பின்னர் head officeல் இருந்து தொடர்புகொண்டு GL Difference ஐ சரி செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் black mark ஆகிவிடும் எனவும் கூறியுள்ளனர். ஏற்கனவே EOD போடும் போது இல்லாத difference இப்போது எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை, எப்படியோ வந்துவிட்டது இப்போது கிளைக்கு சென்று அதைப் பார்க்க வேண்டும் எனவும், நீங்கள் பார்க்கும் போது GL Difference இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்கப்பட்டுள்ளது.

பின்னர் கரும்புள்ளி ஆகிவிடும் என்று நம் அலுவலரை மிரட்டிய பெரும்புள்ளி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட பிழையே அதற்கு காரணம் என அந்த அலுவலரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

தோழர்களே, நாம் post migration issues பற்றி கேட்டால் பதிலே சொல்லாத நிர்வாகம், மக்களுக்கு வட்டி பணம் தர முடியாமல் பதில் கூட சொல்ல முடியாமல் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய இந்த நிர்வாகம், phone போட்டால் கூட எடுக்காத HO இது போல் நாம் செய்யாத வேலைக்காக நம்மை cellphoneல் அழைக்கிறது. இதுபோன்று வேலை நேரம் முடிந்த பின்பு நாம் செய்யாத ஒரு விஷயத்திற்காக யாரும் மீண்டும் கிளைக்கு செல்ல தேவையில்லை. இது போல் எழும் பிரச்சனைகளை உடனடியாக சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வரவும். இதனால் அலுவலர்களுக்கு விளைவுகள் ஏதும் ஏற்படாமல் சங்கம் பார்த்துக்கொள்ளும்.

அறிவுடைநம்பி

GS TNGBOA


Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page