தோழர்களே!
15.11.2018, வியாழக்கிழமை அன்று கிராம வங்கிகளின் தலைமையலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த நமது அகில இந்திய சங்கம் AIRRBEA அறைகூவல் விடுத்தது.
கிராம வங்கி ஊழியர்களுக்கு கனவாக இருந்த பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தி, அதை நனவாக்கி இருக்கிறது AIRRBEA. அவநம்பிக்கைகள், அவதூறுகள், பொய்ப்பிரச்சாரங்கள் அனைத்தையும் முறியடித்து, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை உறுதிப்படுத்தி இருக்கிறது AIRRBEA,
ஆனால், வழக்கம் போல் அரசு தன் களவாணித்தன கைவரிசையைக் காட்டி இருக்கிறது. ‘வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் கிராம வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்' என நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இருந்த போதும், அதனை அமல்படுத்தும்போது, முடிந்த அளவு குறைத்துக் கொடுக்க அரசு சதிகளை அரங்கேற்றி இருக்கிறது.
வணிக வங்கியில் பென்ஷன் திட்டம் 01.11.1993லிருந்து effect ஆனது. ஆனால் கிராம வங்கியில் 01.04.2018 முதல் effect ஆகும் என அரசு அறிவித்திருக்கிறது. இது மிகப் பெரும் மோசடியாகும். கிராம வங்கி ஊழியர்கள் PFல் Bank Contributionஐ 1993லிருந்து திருப்பிச் செலுத்த வேண்டுமாம். ஆனால் பென்ஷன் மட்டும் 01.04.2018 முதல்தான் வழங்கப்படுமாம். 25 வருடத்தை மொத்தமாய் கபளிகரம் செய்யப் பார்க்கிறது அரசு.
Effective Date ஐ அரசு இப்படி விழுங்க முயற்சிப்பதால் Pension commutationலும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
அடுத்ததாக, 01.04.2010ற்குப் பிறகு கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு இந்த பென்ஷன் திட்டம் இல்லையாம். வணிக வங்கியில் உள்ளது போல New Pension scheme (NPS) அமல்படுத்தப்படுமாம். ஆனால் NPS என்பது practical-ஆக முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாத ஒன்று. 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் முன்மொழிந்த பென்ஷன் திட்டத்தின் போது கூட, 2012ம் ஆண்டிலிருந்து புதிதாக பணிக்குச் சேர்கிறவர்களுக்கு NPS என்றுதான் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. ஏனென்றால் NPSஐ முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்பதால்தான். ஆனால் இப்போது 2010ம் ஆண்டில் இருந்து புதிதாகப் பணிக்குச் சேர்கிறவர்களுக்கு NPS என்பது அரசின் பித்தலாட்டம் தவிர வேறொன்றுமில்லை. (01.04.2019க்குப் பிறகு புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு NPS என்று சொல்லப்பட்டிருந்தால்தான் நடைமுறைப்படுத்த முடியும்.)
மேலும் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட Computer increment குறித்து அரசு வாயைத் திறக்க மறுக்கிறது.
இதுபோல, அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்த இருக்கிற பென்ஷன் திட்டத்தில் பல கோளாறுகளும், குறைபாடுகளும் இருக்கின்றன. அவைகளை தெளிவுபடுத்தி AIRRBEA தரப்பில் இந்த திட்டத்தை முழுமைப்படுத்த யோசனைகளும், கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு இருக்கின்றன்.
ஒருபுறம் தவித்துக் கிடக்கும் ஓய்வு பெற்ற கிராம வங்கித் தோழர்களுக்கு அரசு அறிவித்து இருக்கிற இந்த அரைகுறை பென்ஷன் திட்டத்தின் பலனைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இன்னொரு புறம் இந்த அரைகுறை பென்ஷன் திட்டத்தை எல்லோருக்குமான முழுமைப்படுத்தவும், நியாயமாக நடைமுறைப்படுத்தவும் காரியங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதனை மிகச் சரியாகவும், பொறுப்புடனும் AIRRBEA செய்து வருகிறது.
அரசின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தவும், ஊழியர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கவுமான துவக்கப்புள்ளிதான் இந்த 15.11.2018 மாலை நேர ஆர்ப்பாட்டம்.
அதன் முதல் கட்டமாகத்தான் 15.11.2018 அன்று தலைமையலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் சோலைமாணிக்கத்தின் இடிபோன்ற முழக்கத்துடனும், தோழர்களின் திரளான பங்கேற்புடனும், ஆக்ரோசமான கோசங்களுடனும், தொடங்கி தலைமை அலுவலகத்தை அதிரவைத்து, பல மூத்த தோழர்களின் பென்சன் பற்றிய வரலாறுகளும், அரசின் மெத்தப்போக்கும் தெளிவாக விளக்கப்பட்டது. மிக அற்புதமான ஒரு மாலைப்பொழுதாக அமைந்தது இந்த ஆர்ப்பாட்டக்களம்.
பங்கேற்ற அத்துனை தோழர்களுக்கும் செவ்வணக்கம் தோழர்களே!!
Comments