top of page

கீழ்த்தரமான காரியங்களில் இறங்கி இருக்கும் நிர்வாகம்

தோழர்களே!


நிர்வாகம் கீழத்தரமான காரியங்களில் இறங்கி இருகிறது.


நிர்வாகத்தின் முறையற்ற, தெளிவற்ற, பழிவாங்கும் நோக்கம் மட்டுமே கொண்ட online attendance upation ஐ நாம் எதிர்த்தோம். உடனடியாகச் செய்ய வேண்டிய எவ்வளவோ முக்கிய காரியங்கள் இருக்கும்போது, இதற்கு என்ன அவசரம் என்று நாம் அதை புறக்கணிக்குமாறு அறைகூவல் விடுத்தோம்.


நாம் காலை 9.30 மணிக்குத்தான் அறைகூவல் விடுத்திருந்தோம். அதைக் கவனிக்காமல் சில தோழர்கள் update செய்து விட்டிருந்தனர். ஆனாலும் 400 கிளைகளில் அப்டேட் ஆகாமல் இருந்தது. அந்தந்த மண்டல அலுவலகங்களில் இருந்து வாய்மொழியாக கேட்டு மண்டல அலுவலகத்திலேயே நிர்வாகம் attendance ஐ அப்டேட் செய்தது. இப்படி நிர்வாகமே அப்டேட் செய்து கொண்டு, மொத்தமுள்ள 2512 பேரில் 2017 பேர் அப்டேட் செய்து கொண்டதாக இப்போது மண்டல மேலாளர்கள் மூலம் தவறான புள்ளிவிபரங்களைச் சொல்கிறது.


ஏன் இந்த பித்தலாட்டம்?

நம் ஒற்றுமையை, உறுதியைக் குலைப்பதற்கு இப்படி பொய்களை அவிழ்த்து விடுகிறது.

தைரியமிருந்தால் யார் யார் அப்டேட் செய்தார்கள், யார் யார் அப்டேட் செய்யவில்லை என லிஸ்ட்டை வெளியிடட்டும்.


தோழர்களே!


நேற்று attendance updation செய்யாதவர்களுக்கு ஏன் அப்டேட் செய்யவில்லை என ,மண்டல மேலாளர்கள் மூலம் விளக்கம் கேட்க வைத்திருக்கிறது நிர்வாகம். மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குத் தகுந்த பதிலை நாம் வெள்ளிக்கிழமை காலையில் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பி வைப்போம்.


நம்மிடம் நேர்மையும், உண்மையும், உறுதியும் இருக்கிறது. நம்ம்மோடு 2000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வங்கியிலும், 80000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள். நாம் நிமிர்ந்து நிற்போம்.


நிர்வாகத்திடம் பொய்யும், வெறியும், வஞ்சகமுமே நிறைந்து இருக்கிறது. அதிகாரம் மட்டுமே இருக்கிறது.


மிரட்டிப் பணிய வைத்து விடலாம், பயமுறுத்தி அடிமைகளாக்கி விடலாம் என்று நிர்வாகம் நினைக்குமானல், அது ஒரு போதும் நடக்காது. 40 வருட தொழிற்சங்க இயக்கத்தில் சுயமரியாதையும், போர்க்குணமுமே நமது பிறவிக்குணங்களாக இருக்கின்றன.


நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்துகொண்டு, ஒரு இணக்கமான சூழலை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் அழகு. நமது முந்தைய நிர்வாகங்களில், சேர்மன்களில் பலர் அப்படி ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டி வந்தனர். ஆனால் இந்த நிர்வாகம் அதிகாரத் திமிரும், ஆணவமும் கொண்டு நிற்கிறது.


நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.


நிர்வாகம் இதுபோன்று மிரட்டினால் நாம் மேலும் திமிறுவோம். அடங்க மறுப்போம். அத்து மீறுவோம்.


எனவே-

இனி நம் ஒத்துழையாமை இயக்கத்தை மேலும் தீவீரப்படுத்துவோம்.

  1. Online updation of attendance செய்ய வேண்டாம்.

  2. Moratorium period ஐ manual ஆக அப்டேட் இனி செய்ய வேண்டாம்.

  3. AJL incentive ஐ manual ஆக calculate செய்ய வேண்டாம்.

  4. Net Connectivity போனால் எந்த Transactionகளும் செய்ய வேண்டாம்.

  5. 5 மணிக்கு மேல் கிளையில் காத்திருக்க வேண்டாம்.

இதுபோக அடுத்தக் கட்டமாக- மேலும் நிர்வாகம் வெறி பிடித்து நிற்குமானால்-


1. ‘இந்தந்த stationeryகள் இல்லை, எனவே இந்தந்த காரியங்கள் வங்கியில் நடக்காது’ என எழுதி கிளைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து விட்டு, அந்த பணிகளை செய்ய மறுப்போம்.


2. கொரோனாவிலிருந்து ஊழியர்களை பாதுகாக்காத நிர்வாகத்தை அம்பலப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம்.


3. CBS Back-end ல் செய்ய வேண்டிய வேலைகளை manual ஆகச் செய்ய மறுப்போம்.


தோழர்களே!


அடிமைத்தனத்திற்கு எதிராக ஆர்த்து எழுவோம்.


நியாயத்திற்கு மட்டுமே கட்டுப்படுவோம், அதிகாரத்திற்கு கட்டுப்பட மாட்டோம் என்பதை உரக்கச் சொல்வோம்.


பொய்களையும், பித்தலாட்டங்களையும் தோற்கடிப்போம்.


வெற்றி நமதே!


J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS_TNGBOA

65 views0 comments

Comments


world-spin-crop.gif
bottom of page