தோழர்களே!
வணக்கம்.
தமிழ்நாடு கிராம வங்கியில் CBS Migration Process நடந்து கொண்டிருக்கும் இந்த வேளை, கடும் சிரமங்களையும், சவால்களையும் நம் ஊழியர்களும் அலுவலர்களும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக முந்தைய பாண்டியன் கிராம வங்கிக் கிளைகள் அனைத்திலும், தோழர்கள், பெரும் மன அழுத்தத்தோடு பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கிறது.
மக்களை நேரடியாக சந்திப்பதும், அவர்களுக்கு சேவை செய்வதும் கிளைகளில் இருக்கும் ஊழியர்களும், அலுவலர்களும்தான். அன்றாடப் பரிவர்த்தனைகளில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு கைவசம் பதில் இல்லாமல் வாடிக்கையாளர்களை பொறுமையாக இருக்கச் செய்து, பதிலைத் தேடி போன் செய்தால், உடனடியாக பதில் தரும் ஏற்பாடு நிர்வாகத்தரப்பில் இல்லை.
ரூ.25000 வரை கேஷியர் பாஸ் செய்ய வேண்டும் என்றால், இது குறித்து நிர்வாகம் சங்கத்திடம் பேசி இருக்க வேண்டும். கேஷியர்கள் signature verify செய்ய ஏற்பாடு இருந்திருக்க வேண்டும். எதுவும் இல்லாமல், வாடிக்கையாளர்களை முன்னுறுத்தி அழுத்தம் கொடுப்பது முறையற்றதாகவே நாம் பார்க்கிறோம்.
டெப்பாசிட் renewal ஆனதை சென்று பார்த்தால் அசலும், maturity amount-ம் ஒன்றாகவே இருக்கிறது. கேட்டால், இப்போது டெப்பாசிட்டைத் தொட வேண்டாம். அதில் பிரச்சினைகள் இருக்கின்றன என்று போனில் தகவல் தரப்படுகிறது. வாடிக்கையளர்க்ளிடம் என்ன பதில் சொல்ல….? (ஏற்கனவே வங்கிகள் குறித்து தவறான செய்திகளும், வதந்திகளும் வந்து கொண்டிருக்கின்றன…) நம் தோழர்கள் சமாளிப்பதற்குள் மூச்சுத் திணறித்தான் போகிறார்கள்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நாம் ஒரே வங்கியாக உருப்பெறும் இந்த தருணத்தில் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை என்பதை புரிந்து கொள்கிறோம்.
அதே நேரத்தில், இந்த இந்த இடங்களில் சிரமங்கள் இருக்கும் என்பதை முன்கூட்டி அறிந்து, அதனை அனைவருக்கும் அறிவித்து இருந்தாலோ, சங்கங்களோடு கொஞ்சம் கலந்தாலோசித்து இருந்தாலோ, பெரும் அளவுக்கு இந்த சிரமங்களையும், மன அழுத்தத்தையும் நிர்வாகம் தவிர்த்து இருக்க முடியும் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லியாக வேண்டி இருக்கிறது.
தோழர்கள் கடும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். நேரம் காலமில்லாமல் பல கிளைகளில் பணிபுரிந்து இருக்கிறார்கள்.
நிர்வாகத்தரப்பில் இருந்து தர முடியாத ஆதரவை முந்தைய பல்லவன் கிராம வங்கியில் பணிபுரியும் நம் தோழர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் அப் மூலம் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளும், பதில்களும்தான் ஓரளவுக்கு பரிவர்த்தனைகளை நகர்த்த பேருதவி செய்து இருக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு AIRRBEA என்கிற குடையின் கீழ் சாத்தியமானது என்பதை நிர்வாகமும் இந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
நிறைய விமர்சனங்களும், பிரச்சினைகளும் எதிர்கொண்டபடி இருக்கிறோம். அவைகளை தொகுத்து நிர்வாகத்திடம் பேசுவோம். சரி செய்வோம். இது நமது வங்கி என்னும் உணர்வில் ஒன்றிணைந்து, கரம் கோர்த்து, இந்த இக்கட்டான தருணத்தை கடப்போம்.
Comments