தோழர்களே,
நமது நாமக்கல் மண்டல கூட்டம் 07.07.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர்.
Amalgamation notification வந்த நாள் முதல் இன்று வரை நமது சங்க செயல்பாடுகளை மிக நேர்த்தியாக எடுத்துரைத்தார் TNGBOA தலைவர் பத்மநாபன். மேலும் டெல்லி சென்று MPக்களை சந்தித்த அனுபவங்களை தோழர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.
தொடர்ந்து தோழர்கள் தங்களது பிரச்சினைகளை பகிர தயக்கம் காட்ட, TNGBOA பொதுச்செயலாளர் தோழர். அறிவுடை நம்பி எழுச்சியுரையாற்றி அவர்களது தயக்கத்தை போக்கினார்.
அதன் பின்னர் பிரச்சினைகளையும், கருத்துக்களையும் தோழர்கள் பகிர்ந்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
பல்லவனில் நிகழும் NGO dominant பிரச்சினைகள், டிரான்ஸ்பர், தலைமை அலுவலக பிரச்சினைகள் பற்றி நம் அலுவலக தோழர்கள் பகிர்ந்தனர்.
இறுதியாக TNGBWU பொதுச்செயலாளர் தோழர். மாதவராஜ் மிக நேர்த்தியாக Amalgamation அப்புறம் நாம் பெற்ற சலுகைகள் நமது ஸ்தாபன வலிமையினால் மட்டுமே பெற முடிந்தது என்றும், நமக்கு முன்னால் உள்ள பிரச்சினைகளையும் நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதையும் எடுத்துரைத்தார்.
மேலும் தோழர். சுரேஷ், தோழர். பரிதிராஜா, தோழர். தங்க மாரியப்பன் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். கலந்துக்கொண்ட அனைவர் மனதிலும் ஓர் நம்பிக்கையை கண்டிப்பாக விதைத்துள்ளது இந்த மண்டல கூட்டம்.
Comments