நமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள்!


தோழர்களே,

நமது TNGBOA மற்றும் TNGBWU சங்கங்களின் செயற்குழு கூட்டம் திருச்சியில் 15.09.2019 அன்று நடைபெற்றது.

நிர்வாகத்திற்கு போதிய அவகாசம் கொடுத்தும், நம் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து விவாதித்தது. காலதாமதம் செய்து நம் உணர்வுகளை மழுங்கி அடிப்பதும் நியாயங்களை மறுப்பதும் நிர்வாகத்தின் நோக்கமாக இருக்கிறது என்று கருதியது.

எனவே நாம் நமது போராட்டங்களையும் இயக்கங்களையும் தீவிரப்படுத்தவும் நிர்வாகத்திற்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட போராட்ட வடிவங்களை தீர்மானித்திருக்கிறது.

1) செப்டம்பர் 23 முதல் ஒத்துழையாமை இயக்கம் (Non cooperation) நடத்துவது.

a. Permanent staff இருவரோடு மற்ற கிளைகளுக்கு பணம் எடுக்கவோ பணம் செலுத்தவோ செல்வது .

b. எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை மட்டுமே இனி ஏற்று பணி புரிவது.

c. 10 - 5 மணி வரை வேலையை கறாராக அமல் படுத்துவது .

d. Migration பணிகளில் ஒத்துழைக்க மறுப்பது.

2) செப்டம்பர் 24, 25 தேதிகளில் இரு சங்க செயற்குழு உறுப்பினர்களும் தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது.

நமது கோரிக்கைகள் நிறைவேற அனைத்துத் தோழர்களும் சங்கம் அறிவித்திருக்கும் இப்போராட்டத்தில் உறுதியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமது ஒற்றுமையும், உறுதியுமே நிலைமைகளை சாதகமாக்கும். வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

கோரிக்கைகளை முன் வைத்து விட்டு, காலமெல்லாம் காத்திருப்பவர்கள் நாம் அல்ல.

நிர்வாகத்தின் கருணைக்காகவும், மனம் இரங்கி வருவதற்காகவும் அமைதியாய் இருப்பவர்கள் நாம் அல்ல.

நம் உரிமைகளை, நம் நியாயங்களை வலியுறுத்த, வென்றெடுக்க போராடுகிறவர்கள்.

கோரிக்கைகள் முன் நிற்கின்றன.