top of page

25.07.2019 அன்று தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துடன் நடந்த நமது சங்க தோழர்களின் பேச்சுவார்த்தை


தோழர்களே! 

25/07/19 அன்று நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் TNGBOA சார்பில் தோழர்கள் பத்மநாபன் (President), காமராஜ் (Executive President), அருணஜடேசன் (Working President), அறிவுடைநம்பி(GS), அன்டோ கால்பர்ட் (Secretary), வினோசந்தர் (JS) ஆகியோர் கலந்து கொண்டனர்.

1.Book of Instructions மற்றும் Policies ஆகியவை printed formatல் வழங்க வேண்டும் என்றதற்கு, amalgamation மற்றும் அதைத் தொடர்ந்து audit என்று பணிச்சுமை அதிகமாகிவிட்டதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது டிசம்பருக்குள் புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இன்னும் கூட stationeries, loan documents சரியாக கிளைகளுக்கு வழங்கப்படவில்லை மேலும் நாம் கேட்டதை விடுத்து சம்பந்தமில்லாத stationeries மூட்டையாக அனுப்பப்படுகிறது என்று சொன்னதற்கு இரண்டு வாரங்களுக்குள் இது சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. புதிய அலுவலர்களுக்கு வழிகாட்டும் விதமாக scanned copy of filled documents, inspection center மூலமாக intranetல் upload செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. Unsecured மற்றும் high risk portfolio கடன்களான SHG,JLG முதலான loanகளுக்கு கிளை மேலாளருக்கு அதிகாரமளிக்கப் பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு BM முடிவில் யாரும் தலையிட மாட்டார்கள் தகுதியான நபர்களுக்கு கடன் வழங்கினால் போதும் என தெரிவிக்கப்பட்டது. 5. JL documents தமிழிலும் print செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு வாரங்களுக்குள் கிளைகளுக்கு அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.JL Card (triplicate copy) குறித்து பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6. Seniority list பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாகவும் அடுத்த வாரம் அது தொடர்பாக CM,HRDயை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7. Promotion process மூன்று மாதங்களுக்குள் தொடங்கிவிட முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. 8. Leave particulars வழங்க ஆவண செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9. Staff loanஐ பொருத்தவரை CIBIL report கேட்பது கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40% normsல் PF குறித்து விவாதித்த பிறகு முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.SHL வட்டி விகிதத்தை குறைப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10. 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்த 19பேருக்கு confirmation பணிகள் முடிந்து விட்டதாகவும் Police verification, performance appraisal report கிடைக்காத மற்றவர்களுக்கு விரைந்து முடிக்க RMகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11. Banks link implement செய்தபின் எல்லா மண்டலங்களிலும் நமக்கு உதவியாக help desk அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 12. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் புதிய அலுவலர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 13. Officiating allowance மாதந்தோறும் தாமதமின்றி கிடைக்க ஆவண செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. 14. அனைத்து கிளைகளுக்கும் sophisticated printer வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15. Transfer விசயத்தில் கிளரிக்கள் தோழர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் போல் அலுவலர்களுக்கும் ஏற்படக்கூடாது புதிய அலுவலர்கள் பணியில் சேர்வதற்கு முன்பாகவே பணியிலிருக்கும் மற்ற அலுவலர்களுக்கான transfer போடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் transfer requestக்கான காரண்ங்களையும் listல் குறிப்பிட்டு வழங்கும்படியும் CM, HRDயிடம் அதுகுறித்து ஒரு வாரம் கழித்து நேரில் பேசுமாறு தெரிவிக்கப்பட்டது. 16.தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இரவு 10மணி,12 மணி வரை இருக்கவும் விடுமுறை நாட்களில் வரச்சொல்லி நிர்பந்திக்கப்படுவது குறித்து நமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். ஏற்கனவே நம் சங்கம் கடிதம் எழுதியது நீங்கள் அறிந்ததே.இது தொடர்கதையாக நீடிக்கும் பட்சத்தில் உரிய அமைப்புகளிடம் முறையிடுவது மற்றும் இயக்கங்களை முன்னெடுப்பது குறித்து செயற்குழுவில் முடிவு செய்யப்படும். தோழர்களே! சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் பல கோரிக்கைகளுக்கு "ஆகட்டும் பார்க்கலாம்" பாணியிலேயே பதில் சொல்லப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. அலுவலர்களுக்கு நிர்வாகத்தின்மீது அவநம்பிக்கையும் அதிருப்தியும் ஏற்படாதவண்ணம் எல்லாம் சாதகமாக நடக்கும் என காத்திருப்போம்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் நடக்கவிருக்கும் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம். தோழமையுடன், ச.அறிவுடை நம்பி GS-TNGBOA 


56 views0 comments
world-spin-crop.gif
bottom of page