ஒரு தொழிற் சங்கத்தின் (AIBOC) பொதுச்செயலாளராக இருந்த காஞ்சிபுரம் மண்டல மேலாளரின் மனிதாபமற்ற செயல்


தோழர்களே காஞ்சிபுரம் மண்டல மேலாளரின் அத்துமீறல்கள் குறித்து ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். அவைகள் குறித்து அவரிடமே நமது சங்கங்களின் சார்பில் நேரில் பேசி இருந்தோம். தனது நடவடிக்கைகளில் எந்த உளநோக்கமும், பழிவாங்கும் நோக்கமும் கிடையாது என்றும், தான் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் நலன் குறித்து சிந்தித்து செயல்படுகிறவன் என்றும் சொல்லி இருந்தார். ஆனால் உள்நோக்கமும், பழிவாங்கும் நோக்கமும் இருப்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் படம் பிடித்து காட்டுகின்றன. நமது பொன்னேரி கிளை மேலாளர் அவர்கள் மே 24-ஆம் தேதி உடல்நிலை குறைவால் ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தார் தொடர்ச்சியாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பை ஒரு நாள் extend செய்து மண்டல மேலாளர் இடம் கேட்டிருக்கிறார். அது சிறிதும் மனிதாபிமானம் இன்றி அவரால் மறுக்கப்பட்டது. நமது விடுப்பை தகுந்த காரணமின்றி மறுப்பதற்கு இங்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஆனாலும் உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பை நீட்டிக்க வேண்டி இருக்கிறார். அதற்கு மண்டல மேலாளர் "உங்கள் cashierக்கு deputation போடப்பட்டுள்ளது அதனால் நீங்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அல்லது அருகில் இருக்கும் கிளைகளில் மாற்று ஏற்பாடு ஏதாவது இருந்தால் முயற்சிக்கவும்" என்றும் சொல்லியுள்ளார். பொன்னேரி கிளை மேலாளர் திரு ரமேஷ் பாபு அவர்கள் அருகிலிருந்த மதுரவாயல் கிளை மேலாளரிடம் பேசி அங்கிருந்து டெபுடேஷன் ஏற்பாடு செய்தார். அதனை மண்டல மேலாளருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். ஆனால் இது எதுவுமே நடக்காதது போல கடந்த ஜூன் 7ஆம் தேதி மண்டல அலுவலகத்தில் இருந்து திரு ரமேஷ் பாபுவுக்கு ஒரு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டது. அதில் மண்டல மேலாளரின் அதிகாரத்தை?! திரு. ரமேஷ் பாபு தவறாக பயன்படுத்தியதாகவும் அதற்கு தகுந்த விளக்கம் தரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு திரு ரமேஷ் பாபு அவர்களும் விளக்கமளித்து இருந்தார்கள். ஆனாலும் அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என்று திரும்ப ஜூன் 21-ஆம் தேதி மண்டல மேலாளர் இடமிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் ஒரு தொழிற் சங்கத்தின் (AIBOC) பொதுச்செயலாளராக இருந்த இந்த மண்டல மேலாளர் தான் சக தொழிலாளர்களுக்கு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார் . இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் , முறையான பதில் கிடைக்கப் பெறாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது இருக்கும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படியெல்லாம் எழுதவும், கடிதம் கொடுக்கவும் மண்டல மேளாளர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது? மண்டல மேலாளர்கள் இப்படி விளக்கம் கேட்கலாம் என Staff Service Regulation-களிலோ, அல்லது தலைமையலுவலகத்தில் இருந்து முறையான அறிவிப்புகளோ இருக்கின்றனவா? இப்படி விளக்கம் கேட்க மண்டல மேலாளர்களுக்கு அதிகாரமும் கிடையாது. இதுபோன்ற முறையற்ற பேப்பர்களுக்கு நாம் பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அதே வேளையில், காஞ்சிபுரம் மண்டல மேலாளரை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது இத்தகைய பழிவாங்கும் போக்குகள் தொடருமானால், நமது அணுகுமுறையும் வேறாகத்தான் இருக்கும். S.அறிவுடைநம்பி GS-TNGBOA