தமிழ்நாடு கிராம வங்கியாக பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் இணைக்கப்பட்ட போது, ஓய்வு பெற்ற இந்தியன் வங்கியின் உயரதிகாரி மணிமாறன் என்பவர் advisor ஆக நியமிக்கப்பட்டது விசித்திரமாகப் பட்டது. அது குறித்து விசாரித்த போது, அவரது அனுபவம், இந்த இணைப்புக்குத் தேவை என இந்தியன் வங்கி கருதியதாகச் சொல்லப்பட்டது. ஓய்வு பெற்ற உயரதிகாரியை இப்படி ஒரு பணிக்கு அமர்த்துவது சரியல்ல என நாம் அப்போதே கருதினோம். கிராம வங்கிக்கு சேர்மன், ஜி.எம்கள் ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து வருவார்கள். இணைப்பு குறித்து வழிகாட்ட இந்த்தியன் வங்கி இருக்கிறது. இதென்ன புதுசாய் ‘அட்வைசர்’ என நாம் கவனித்தோம். அந்த அட்வைசர் குறித்தும், அவரது அட்வைஸ்கள் குறித்தும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக அவர் AIBOC சங்கத்தின் ஆதரவாளர் என்றும், AIRRBEA சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்றும் கேள்விப்பட்டோம். நிலைமைகளை ஆராய்வது என பொறுமை காத்தோம். தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் முக்கியப்பணிகளில் அவரது தலையீடும், சேர்மன் போன்ற உயரதிகாரிகளுமே அவரது அசைவுகளுக்கேற்ப நடந்து கொள்வதும் குறித்து அறிய வந்த போது வருத்தமாக இருந்தது. ஆனால் நாளாக, நாளாக ஓய்வு பெற்ற அந்த மணிமாறனின் ஆதிக்கத்தில்தான் தலைமையலுவலகம் செயல்பட ஆரம்பித்தது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த வண்னம் இருந்தன. அந்த மணிமாறன் மேனேஜர்ஸ் மீட்டிங்கில் கூட வந்து உட்கார்ந்து ‘அட்வைஸ்’ பண்ண ஆரம்பித்ததும் நிலைமை எல்லை மீறிப் போய்க் கொண்டு இருப்பதாய் நாம் தீர்மனித்தோம். அட்வைசர் மணிமாறன் தமிழ்நாடு கிராம வங்கியில் நீடிப்பது முறையற்ற செயல் என்றே நாம் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் ‘unauthorised existence’ என்றே இதனை கருதுகிறோம். தமிழ்நாடு கிராம வங்கியின் உயர் அதிகாரியாய், ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து சேர்மன் இங்கு இருக்கும் போது, இந்த ‘அட்வைசர்’ தேவையில்லை என நாம் கோரிக்கை வைக்கிறோம். இந்தியன் வங்கி நிர்வாகம் உடனடியாக, அட்வைசர் மணிமாறனை தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து திரும்பப் பெற வேண்டும். முறையற்ற நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் நாம் இப்பிரச்சினையை அகில இந்திய அளவில் எழுப்ப வேண்டியதிருக்கும் என சொல்லிக் கொள்கிறோம். நம் முக்கிய கோரிக்கையாக்கி இயக்கம் நடத்தவும் தயங்கிட மாட்டோம் என அறிவிக்கிறோம். J.மாதவராஜ் GS-TNGBWU
S.அறிவுடைநம்பி
GS-TNGBOA