top of page

காஞ்சிபுரம் மண்டல மேலாளரிடம் நமது சங்கங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை


தோழர்களே!

வணக்கம்.

11.6.2019 அன்று நமது இரு சங்கங்களின் சார்பிலும், காஞ்சிபுரம் மண்டல மேலாளரை சந்தித்துப் பேசினோம்.

சமீப காலமாக, காஞ்சிபுரம் மண்டலத்தில் நமது சங்க உறுப்பினர்கள் நிர்வாக ரீதியாக பாதிக்கப்படுவது தொடர் நிகழ்வுகளாக கருதப்பட்டதால், நாம் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.

தொழிற்சங்க ரீதியாக, பாகுபாடுகளோடு தான் ஒரு போதும் நடந்து கொள்வதில்லை, நடந்து கொள்ள மாட்டேன் என்பதை காஞ்சிபுரம் மண்டல மேலாளர் தெளிவு படுத்தினார்.

வங்கியில் இருக்கும், கடுமையான ஆட்பற்றாக்குறையால் உரிய நேரத்தில், முறையாக லீவு சாங்ஷன் செய்வதிலும், டெபுடேஷன் ஏற்பாடு செய்வதிலும் நெருக்கடிகள் இருப்பதாகவும், அதனால் எழுந்த பிரச்சினைகளே என்றும் அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக, மேத்தா நகர், பொன்னேரி கிளைப் பிரச்சினைகள் பேசப்பட்டன. நிர்வாக ரீதியாக அதில் காணப்படும் தவறுகளை நாம் சுட்டிக் காட்டினோம். Communicationல் இருக்கும் பிரச்சினைகள்தாம் அவை என்றும், தான் ஒருபோதும் வேண்டுமென்று எந்த ஊழியரும் அலுவலரும் பாதிப்படையுமாறு நடந்து கொள்வதில்லை என்று கூறினார்.

தான் ஏற்கனவே தொழிற்சங்கத்தின் பொறுப்பில் இருந்ததாகவும், தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்திருப்பதாகவும், முடிந்த வரை பிரச்சினைகள் இனி வராமல் பார்த்துக் கொள்வதாகவும் நம்பிக்கையளித்தார்.

தற்காலிக மெஸஞ்சர்களுக்கு ரூ.475/ - இன்னும் வழங்கப்படாதது குறித்து பேசினோம். ரூ.475/- கொடுக்கச் சொல்லி விட்டதாக அவர் சொன்னார். காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்திலும், கிளையிலும் ரூ.475/- கொடுக்கப்பட்டு விட்டது.

இந்த பேச்சுவார்த்தை நிலைமைகளில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

J.மாதவராஜ்

GS-TNGBWU

S.அறிவுடை நம்பி

GS-TNGBOA


50 views0 comments
world-spin-crop.gif
bottom of page