வாய் மூடிக்கிடந்த TNGB AIBOC சங்கம், இல்லை, ’நாங்களும் வாய் திறக்கத்தான் செய்தோம், நீங்கள் பார்க்கவி


TNGBயில் பணி நியமனத்தின் போது bond வாங்கும் முறை கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. Amalgamation அறிவிப்பு வந்ததில் இருந்து, தொடர்ந்து இங்குள்ள AIRRBEA இணைப்புச் சங்கங்கள் குரல் கொடுத்ததும், எடுத்த முயற்சிகளும், நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும். இதற்கு சமரசமற்ற AIRRBEA சங்கங்களும், ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த முன்வந்திருக்கும் நிர்வாகமுமே காரணம். சம்பந்தமே இல்லாமல் TNGBயில் இருக்கும் AIBOC இணைப்புச் சங்கம் ஆஜராகி, இதற்கு நாங்களும்தான் காரணம் என்று சொல்வது குபீரென்று அனைவருக்கும் சிரிப்பையே வரவழைக்கிறது. நாங்கள் 3,50,000 உறுப்பினர்களைக் கொண்ட AIBOC சங்கத்தின் அங்கம் என்று மார்தட்டுகிறது. நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எப்படிப்பட்ட அங்கம் என்பதைத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. வணிக வங்கியில் AIBOC மிகப்பெரிய சங்கம்தான். வணிக வங்கியில் அலுவலர்களின் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செயல்படுகிற சங்கம்தான். அதன் இயக்கங்களில் விமர்சனங்கள் இருந்த போதும், வணிக வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் அதன் பங்கும் பாத்திரமும் முக்கியமானது. பல சமயங்களில் பாராட்டுக்குரியதாகவும் இருக்கின்றன. ஆனால், கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் அதன் பங்கும், பாத்திரமும் முற்றிலும் மாறுபடுகின்றன. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். வணிக வங்கியில் அதிகாரத்தை எதிர்த்து ஓரளவுக்கு பேசுகிற AIBOC, கிராம வங்கிகளில் அதிகாரத்தின் பீடங்களில் இருந்து கொண்டு பேசுகிறது. இதுதான் அடிப்படை முரண்பாடு. அதனால்தான் கிராம வங்கிகளில் இருக்கிற AIBOC சங்கம், நிர்வாகத்தை எதிர்த்து ஒரு போதும் பேசுவதில்லை. தாங்களே .நிர்வாகமாகிப் பேசுவதுதான் நடக்கிறது. வணிக வங்கிகளில் இருக்கிற AIBOC சங்கம், தங்கள் colleagues களே, கிராம வங்கி நிர்வாகத்தின் பொறுப்புகளில் இருப்பதால், கிராம வங்கி அலுவலர்களின் உரிமைகளை பேசுவதில் மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடியுங்கள் என கிராம வங்கிகளில் இருக்கிற AIBOC சங்கத் தலைமைக்கு அறிவுறுத்துகின்றன. ”நம்மாள்தான் அவர். பார்த்து நடந்து கொள்ளுங்கள்’ என கீழ்படியும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அப்படியே கிராம வங்கி AIBOC சங்கத் தலைமையும் அந்த ‘நம்மாள்’ புரிதலோடு நிர்வாகத்தோடு ஐக்கியமாகின்றன. இதுதான் தொடர்ந்து நடக்கிறது. கிராம வங்கிகளில் இருக்கும் AIBOC சங்கம் வணிக வங்கிகளில் இருக்கும் AIBOC சங்கத்தின் வாலாகி விடுகின்றன. 3,50,000 உறுப்பினர்களைக் கொண்ட வணிக வங்கி AIBOC சங்கத்தின் அங்கம் என்று குறிப்பிடுவது வேறு எதையுமல்ல. அந்த வாலைத் தான். எனவே இயல்பாகவே, கிராம வங்கிகளில் பற்றி எரியும் பிரச்சினைகளில், அங்குள்ள அலுவலர்கள் படும் துயரங்களில் கிராம வங்கியில் இருக்கும் AIBOC சங்கம் கவலையோ அக்கறையோ கொள்வதில்லை. அதை மறைப்பதற்கு, ‘நம்ம பேங்க்’, ‘நம்ம வளர்ச்சி’ என்று பெருமிதம் கொள்ள வைப்பதையே தன் முழு நேர சங்கப்பணியாய் வைத்திருக்கும். (இந்த இடத்தில் முன்னர் சொன்ன ‘நம்மாளு’ என்பதையும் இணைத்துப் பார்த்துக் கொள்வீர்களாக!) அதுதான் கிராம வங்கியின் அடிப்படைப் பிரச்சினைகளை கோரிக்கையாக்குவது, அது குறித்து தன் உறுப்பினர்களிடம் பேசுவது, அதை நிர்வாகத்திடம் எடுத்துச் செல்வது, அவைகளை வென்றெடுப்பதற்கான இயக்கங்கள் நடத்துவதை கிராம வங்கியில் இருக்கும் AIBOC சங்கம் ஒருபோதும், தப்பித் தவறியும் செய்வதில்லை. செய்யவும் முடியாது. இதுதான் விதி. இதைத்தான் நாம் விமர்சனம் செய்கிறோம். Recruitment குறித்து வாய் திறக்கவில்லை. Allowances குறித்து வாய் திறக்கவில்லை. Work load குறித்து வாய் திறக்கவில்லை. பணி முடித்து காலதாமதமாக கிளையை விட்டு வீட்டுக்கு செல்ல நேர்வது குறித்து வாய் திறக்கவில்லை. Bond குறித்து வாய் திறக்கவில்லை. AIRRBEA சங்கங்கள் இங்கு ஒன்றிணைந்து வலிமை பெற்ற பிறகு, தமிழ்நாடு கிராம வங்கியின் அடிப்படைப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வாய் மூடிக்கிடந்த TNGB AIBOC சங்கம், இல்லை, ’நாங்களும் வாய் திறக்கத்தான் செய்தோம், நீங்கள் பார்க்கவில்லை’ என்று இப்போது வாய் திறக்கிறது! பாண்டியனில் நிலைமை அப்படி இருந்தது, அதனால் அங்கு bond வாங்கவில்லை. பல்லவனில் நிலைமை இப்படி இருந்தது அதனால் bond வாங்கப்பட்டது. இப்போது இரண்டும் சேர்ந்த பிறகு நிலைமை எப்படியோ ஆகிவிட்டது. அதனால் bond வாங்கவில்லை என வாயைத் திறந்து உளறிக்கொட்டுகிறது. விழுந்தே கிடந்தாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை என கிடந்து அரற்றுகிறது. ஒரு தொழிற்சங்கம் உறுப்பினர்களின் காதில் பூ சுற்றுகிற காரியங்களை செய்கிறதே என நிஜமாகவே நாங்கள் வருத்தப்படுகிறோம். “ஏன் நம்மால் இந்தக் காரியத்தை இவ்வளவு நாளாக நம்மால் செய்ய முடியவில்லை.” என்னும் குற்ற உணர்வோடு பரிசீலியுங்கள். யாருக்கோ வாலாக இருக்காமல், உங்கள் உறுப்பினர்களுக்கு தலையாக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகிறோம். வரவேற்கிறோம்.