புதுவை பாரதியார் கிராம வங்கியில், Recognition of union, Transport Allowance, Cashier Allowance, Bonus to temp messengers, Minimum wages to temp messengers போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிர்வாகன் இழுத்தடித்தாலும், லீவு விஷயத்தில் கெடுபிடிகள் செய்ததாலும், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation increment நிறுத்தியதாலும், அங்குள்ள நமது AIRRBEA இணைப்புச் சங்கமான Puduvai Bharathiar Grama Bank Employees Union, ஜூன் 10ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. இன்று பாண்டிச்சேரியில், Assistant Labour commissioner நிர்வாகத்தையும், சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
சங்கத்தின் சார்பில் தோழர்.மாதவராஜ் (GS - AIRRBEA TN and Puduvai), தோழர். பத்மநாபன் (President- AIRRBEA TN and Puduvai), தோழர்.ரவீந்திரன் (GS - Puduvai Bharathiar GBEU), தோழர். சங்கர் (Jt. Secretary, BEFI TN) ஆகியோர் கலந்து கொண்டோம்.
நிர்வாகத்தின் சார்பில் பொதுமேலாளரும், தலைமையலுவலக அலுவலரும் கலந்து கொண்டனர்.
ஸ்பான்ஸர் வங்கிக்கு தகவல் தெரிவித்து விட்டு, நமது சங்கத்தை recognise செய்ய நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation increment கொடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஸ்பான்ஸர் வங்கி அனுமதி பெற்று Transport Allowance வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
Cashier allowance போர்டில் வைத்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
Recruitment நடந்து புதிய தோழர்கள் பணிக்குச் சேர்ந்ததால் லீவில் கெடுபிடிகள் குறைந்துள்ளதால், அந்தப் பிரச்சினைக்கு நாம் அழுத்தம் கொடுக்கவில்லை.
தற்காலிக மெஸஞ்சர்களுக்கு minimum wages க்கு தனியாக ஒரு complaint செய்யுமாறு லேபர் கமிஷனர் சங்கத்திடம் தெரிவித்தார்.
பல முக்கியமான கோரிக்கைகளில் மிகச் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், ஜூன் 10 வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
AIRRBEA - Zindabad!
Workers unity - Zindabad!