காஞ்சிபுரம் மண்டல மேலாளரின் அடாவடித்தனமும் அத்துமீறலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
- TNGBOA AIRRBEA
- May 31, 2019
- 1 min read

தோழர்களே!
காஞ்சிபுரம் மண்டல மேலாளரின் அடாவடித்தனமும் அத்துமீறலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக AIBOC செயல்படுவதை நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இவர் வங்கி செலவிலேயே கிளைகளுக்குச் சென்று AIBOC சங்கத்தின் சார்பில் வெள்ளி காசுகளை விநியோகம் செய்ததை நாம் உடனே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
அப்போதே நிர்வாகம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரின் அத்துமீறல்கள் தொடர்ந்திருக்காது.
ஊழியர்களை கிள்ளு கீரையாய் நினைப்பதையும் அடிமை போல நடத்துவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
-S.அறிவுடைநம்பி
GS-TNGBOA
Commentaires