top of page

நள்ளிரவு வரை கிளையில் நடைபெற்ற inspection!


தோழர்களே!

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (24.05.2019) crown software பயன்படுத்தும் கிளைகளில் day end போடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. காரணம் விசாரித்தபோது டேட்டா சென்டரில் தகுந்த முன்னறிவிப்பின்றி பிரதம மந்திரி இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்வது, கடன் கணக்குகளுக்கு வட்டி கணக்கீடு செய்வது என back end வேலைகள் கிளைகளில் day end முடிவதற்கு முன்னரே தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வழக்கமாக இத்தகைய வேலைகள் எல்லாக் கிளைகளிலும் dayend முடித்த பிற்பாடு நடைபெறும். இதுகுறித்து சேலம் தலைமையகத்தில் தொடர்பு கொண்டோம். அதன் தொடர்ச்சியாக டேட்டா சென்டர் இன் ஒருங்கிணைப்பாளர் நம்மை தொடர்புகொண்டு இனி இத்தகைய இடர்பாடு நிச்சயம் நிகழாது என்று உறுதியளித்தார். இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கிறோம். நமது காங்கேயம் கிளையில் inspection கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது நேற்று முன் தினம் இரவு 9 மணி வரையிலும் மற்றும் நேற்றைய தினம் இரவு 12 மணி வரையிலும் inspection நடைபெற்றதாக அறிய வந்தோம். உடனடியாக Inspection Department chief manager உடன் தொடர்பு கொண்டு நமது அதிருப்தியை பதிவு செய்தோம். பெண் தோழர்களும் இருந்த அந்தக் கிளையில் நள்ளிரவு வரை inspection நடைபெற்றது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. Chief manager தமக்கு இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்றும் அவ்வாறு நள்ளிரவு வரை inspection நடைபெற்றதாக இருந்தால் அதுகுறித்து விசாரித்து இனி அதுபோல் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக நம்மிடம் சொன்னார். சொன்னபடியே சம்மந்தப்பட்ட inspector of branchesஐயும் அழைத்து அறிவுறுத்தியிருக்கிறார். நமது கருத்துகளுக்கு செவிசாய்த்து அதற்கு பதில் அளித்தது வரவேற்கத்தக்கது. 

தோழர்களே உங்கள் குறைகளை அல்லது உங்களுக்கு நேரும் இன்னல்களை சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தயங்க வேண்டாம் உடனடியாக தொடர்பு கொண்டால் மட்டுமே நம்மால் விரைந்து செயலாற்ற முடியும்.

அறிவுடைநம்பி

GS TNGBOA 


43 views0 comments
world-spin-crop.gif
bottom of page