top of page

நம் அன்புத் தோழர் நடராஜன் அவர்களின் பணி நிறைவு விழா


தோழர்களே!

வணக்கம்.

நம் அன்புத் தோழர் நடராஜன் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.

1989ம் ஆண்டில் கிளர்க்காக பணிக்குச் சேர்ந்து, பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் வட்டாரச் செயலாளராக, செயற்குழு உறுப்பினராக இருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். அலுவலராக பதவி உயர்வு பெற்ற பின்பு பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனின் உதவிப் பொதுச்செயலாளராக இருந்தவர். 2016ம் ஆண்டில், PGBOUவும், PGBOAவும் இணைந்து ஒரே சங்கமாக PGBOA உருவான போது அதன் பொதுச்செயலாளராக செயல்பட்டார். இப்போது தமிழ்நாடு கிராம வங்கியின் உதவித் தலைவராக இருக்கும் தோழர்.நடராஜன் பணி ஓய்வு பெறுகிறார்.

எளிமையானவராக, எல்லோரிடமும் நட்பு பாராட்டுகிறவராக, அதே நேரத்தில் கொண்ட கொள்கையில் அழுத்தமானவராக இருந்தவர் தோழர் நடராஜன். 

ஆரவாரமில்லாத அவரது பணி பாராட்டுக்குரியது. அலுவலர்த் தோழர்கள் மீது எடுக்கப்பட்ட எத்தனையோ ஒழுங்கு நடவடிக்கைகளை சாதுரியமாகவும், சரியாகவும் தோழர் நடராஜன் எதிர்கொண்டார். தோழர்கள் செல்வகுமார் திலகராஜ், பிச்சைமுத்துவிற்கு பிறகு, தோழர் நடராஜன் அந்த அரும்பணியை செய்திருக்கிறார்.

நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் நிதானமாகவும், உறுதியாகவும் நின்று காரியங்களை சாதிப்பதற்கு முன்னின்றவர் அவர்.

இளம் தோழர்களோடு மிக இயல்பாக கலந்துரையாடியவர்.

அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து தொழிற்சங்கம் அழைப்பு விடுத்த அனைத்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் கலந்து கொண்டவர். 

அவரது பணியை நினைவு கூறுவது, நம் எதிர்காலப் பணிகளுக்கு வேகம் அளிப்பதாக இருக்கும்.

எனவே- 

வரும் ஜூன் 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவருக்கு சாத்தூரில் வைத்து அவரது பணி நிறைவு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

சாத்தூர் கிளையில் (5143) ‘சேமிப்புக் கணக்கு எண் : 514301000066666 'Sattur – Virudhunagar PGB Friends Group’ (IFSC: IOBA-0-PGB-001) என்ற கணக்கிற்கு தோழர்கள் தங்களால் இயன்ற நிதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சாத்தூர் பைபாஸ் பஸ் ஸ்டாப்பின் அருகே இருக்கும் SK Paradiseல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

தோழர் நடராஜன் ஆற்றிய தொழிற்சங்கப் பணி, காட்டிய தோழமை நிறைந்த நினைவுகளோடு கூடுவோம்.

அவசியம் வாருங்கள்.,

தோழமையுடன்

S.அறிவுடை நம்பி        J.மாதவராஜ்

GS – TNGBOA                  GS – TNGBWU

02.06.2019 அன்று சாத்தூரில் நடந்த தோழர் நடராஜன் அவர்களின் பணி நிறைவு விழாவின் சில காட்சிகள்:


59 views0 comments
world-spin-crop.gif
bottom of page