top of page

நமது தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்


தோழர்களே! வணக்கம். Amalgamation அறிவிப்பு வந்தவுடன், AIRRBEA இணைப்புச் சங்கங்களாகிய நாம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று, பாண்டியன் மற்றும் பல்லவனில் இருக்கும் better allowances-களை தமிழ்நாடு கிராம வங்கியில் வழங்க வேண்டும். இரண்டு, Recruitmentஐ உடனடியாக நடத்த வேண்டும். இந்தியன் வங்கி பொது மேலாளர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், better allowances வழங்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. Recruitmentஐ நடத்தாமல் காலம் தாழ்த்தவும் நாம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தோம். லேபர் கமிஷனர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் மாதத்திற்குள் Recruitment நடத்துவதாக நிர்வாகம் எழுத்து பூர்வமாக ஒப்புக்கொண்டது. ஆனால், better allowancesம் வழங்காமல், Recruitment பணிகளையும் துவக்காமல் காலதாமதம் ஆனது. Recruitment குறித்து பத்திரிகையில் செய்தி தந்ததாக TNGBWU & AIRRBEA TN and PUduvai பொதுச்செயலாளர் தோழர் மாதவராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்கும் தொழிற்சங்க விரோத செயல்களில் நிர்வாகம் ஈடுபட்டது. எனவே நாம் நிர்வாகத்தை எதிர்த்து, நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளைகளில் பேட்ஜ் அணிந்தோம். அதன் தொடர்ச்சியாக, தலமையலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு Recruitment-ல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு record verification-ற்கான கடிதங்கள் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அனுப்பி இருக்கிறது. வடதமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3ம் தேதி சேலத்திலும், தென் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 7ம் தேதி விருதுநகரிலும் Record verification நடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் ‘Other Allowances” ற்கான சர்க்குலர்கள் வெளியிட்டு இருக்கிறது. Halting Allowance, Officiating Allowance, Transport Allowance, Newspaper Allowance, Closing Allowance, Fuel Reimbursement போன்ற அலவன்சுகளை நிர்வாகம் நம்மிடம் ஒப்புக்கொண்டபடி வழங்குவதற்கு சர்க்குலர்கள் வெளியிட்டு இருக்கின்றன. புதிதாக பணிக்குச் சேர்கிறவர்களிடம் Bond வாங்குவதும் அனேகமாக இருக்காது என்றே தெரிய வருகிறது. இவை யாவும், தொழிற்சங்க ரீதியாக நாம் முன்னெடுத்த முயற்சிகளால் சாத்தியமானது. AIRRBEA இணைப்புச் சங்கங்களான TNGBWU, TNGBOA வால் நிறைவேறியது என்பதை, நம் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வரும் தோழர்கள் அறிந்திருப்பார்கள். இன்னும் Staff Housing Loan, Staff vehicle Loanல் வட்டி விகிதங்கள், eligibility போன்றவற்றில் முரண்பாடுகள் இருக்கின்றன. வங்கியின் லாபத்தில் 2 சதவீதம் Staff Welfare Fund ற்கு ஒதுக்க வேண்டியது இருக்கிறது. பணிபுரிகிறவர்களுக்கும், Retire ஆனவர்களுக்கும் Medical Insurance scheme நடைமுறைப்படுத்த வேண்டியது இருக்கிறது. Temporary messengerகளுக்கு minimum wages கொடுப்பதில் uniformity இல்லை. நோய்கள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டிய நிலையில் Eye check-up, Medical check-up போன்ற allowanceகளில் வயது வரம்பை குறைக்க வேண்டியது உள்ளது. தோழர் மாதவராஜ் மீது தொழிற்சங்க விரோத நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டியது இருக்கிறது. இதனை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதே நேரத்தில், வங்கியில் தொழில் அமைதி கருதியும், தொழிற்சங்கங்களின் குரல்களுக்கு மதிப்பளித்தும் நிர்வாகம் இதுவரை எடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வரவேற்போம். நமது தொழிற்சங்க நடவடிக்கைகளால்தான் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் அழுத்தமாக உணர்வோம். உணர்த்துவோம். தோழமையுடன் J.மாதவராஜ்           S.அறிவுடை நம்பி GS-TNGBWU              GS - TNGBOA 


55 views0 comments
world-spin-crop.gif
bottom of page