தோழர்களே !
நம் TNGBOAவின் General Bodyக்கு பின் நம் வங்கி தலைவருடனான முதல் சந்திப்பு சேலத்தில் நேற்று (23.04.2019) நடைபெற்றது. நம் சங்கத்தின் சார்பில் தோழர்கள் பத்மநாபன் (President), காமராஜ் (Executive President), அருணஜடேசன் (Working President), நடராஜன் (Vice President), அறிவுடைநம்பி (General Secretary), அண்டோ கல்பர்ட் (Secretary), ஸ்ரீனிவாசமூர்த்தி (Secretary), ஆனந்த் (Joint Secretary), வினோசந்தர் (Joint Secretary), ஆறுமுகபெருமாள் (Treasurer) கலந்துகொண்டனர். நாம் தற்போது எதிர்கொள்கிற உடனடி பிரச்சனைகளையும் நம் தேவைகளையும் விளக்கினோம். Managers' meet 4 மணிக்கு தொடங்கி காலதாமதமாக முடிப்பது குறித்தும் அதில் சில RMகள் பழிவாங்கும் எண்ணத்துடன் மேலாளர்களை நடத்துவது குறித்தும் பேசினோம். அதற்கு chairman, managers' meet சீக்கிரம் முடிக்க சொல்வோம் என்றார். தாமதமாக நடத்தும் RMகளை போனில் அழைத்து சில சமயங்களில் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.இதைத்தொடர்ந்து சில வட்டாரங்களில் இப்போதே 2.30 மணிக்கு managers' meet நடத்துவதாக தெரியவருகிறது.இது வரவேற்கத்தக்கது. விடுமுறை நாட்களில் பணிக்கு வர சொல்வது மற்றும் Audit என்று கூறி விடுமுறை நாட்களில் வர கூறுவது சரியான அணுகுமுறை இல்லையென்றும் அவ்வாறு வந்தால் comp off வேண்டும் எனவும் கூறினோம். அதற்கு chairman, 630 கிளைகளையும் வர சொல்லவில்லை எனவும் audit போது exigencyயால் ஒரு நாள் வரலாமே என்றார் ! அவசியம் கருதி விதிவிலக்காக வருவது காலப்போக்கில் விதிமுறை ஆக்கப்படுவதையும் விதிவிலக்கே பின்னர் விதியாவதையும் சுட்டி காட்டினோம். Additional officer கள் CL எடுக்க Branch Manager க்கு power அளிக்கவேண்டும் எனவும்,அலுவலர்கள் எவ்வித குளறுபடியும் இல்லாமல் செயல்பட BOOK OF INSTRUCTION அவசியம் வேண்டும் எனவும் எடுத்துரைதோம். Book of instruction தயாராகி கொண்டிருப்பதாகவும் விரைவில் கொடுக்கப்படும் எனவும் chairman உறுதியளித்தார். அலுவலர்களுக்கு விடுப்பு அளிப்பதில் கெடுபிடி காட்டக்கூடாது ஒருவர் தன் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது அலுவலகத்தில் ஊக்கத்துடன் பணிபுரிய வழிவகுக்கும் என்று நாம் குறிப்பிட்டதைஅவரும் உணர்ந்திருக்கிறார்.நாம் நமது இலக்குகளை அச்சுறுத்தி அடையமுடியாது மகிழ்ச்சியான பணிச்சூழலை உருவாக்குவதன்மூலமை அடைய முடியும் என்பதையும் குறிப்பிட்டோம். Jewel loan rate மற்றும் தமிழில் JL document பற்றி பேசுகையில், இன்று (நேற்று) JL rate circular போட்டிருப்பதாகவும், Tamil document குறித்து ஆலோசிப்பதாகவும் chairman தெரிவித்தார். Deputation TA குறித்தும் முக்கியமான circular கள் printed format இல் branch க்கி அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் பேசினோம். மேலும், சில RM கள் நம் தோழர்களை ஒருமையில் பேசியதை சுட்டி காட்டினோம். அது தவறு எனவும் இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்கும் எனவும் chairman நம்பிக்கை அளித்தார். 31.3.19 க்கு முந்தைய அதாவது மார்ச்-2019க்குரிய news paper allowance, petrol reimbursement ,HA முதலியவற்றை RM கள் வழக்கம் போல் sanction செய்யலாம் என கூறிவிட்டதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய (திறக்கபடவிருக்கும்) கிளைகள் இனி 10x10 சதுரடிகளில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம். இது நிச்சயமாக கடைபிடிக்கப்படும் என்று chairman உறுதியளித்தார். Amalgamationக்கு பின்னர் தமிழ்நாடு கிராம வங்கியின் முடிவுகளில் வங்கியின் தூண்களாக இருக்கும் நம் அலுவலர்களின் கருத்துகள் கேட்கப்படவேண்டும் என்றும் கேட்டுகொண்டோம் . மேலும், Scale IV - Scale V promotion judgement ஐ கருத்தில்கொண்டு விரைவில் promotion அளிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டோம். நம் TNGBOAவின் General Secretary மற்றும் President இருவருக்கும் சேலத்திற்கு Transfer வேண்டும் என கேட்டுள்ளோம். இது தொடர்பாக ஆலோசிப்பதாக chairman கூறினார். சில முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் மொத்தத்தில் ஒரு புரிதலுக்கான சந்திப்பாக இருந்தது.
S.அறிவுடைநம்பி General Secretary, TNGBOA