தோழர்களே! புதுவை பாரதியார் கிராம வங்கி நிர்வாகம் இந்த ஆண்டு இறுதியில் செய்திருக்கும் சில பரிவர்த்தனைகள் window dressing, favouring sponsor bank, favoutism to relative of executives என பல வகைகளில் கண்டனத்துக்குரியவையாய் இருந்திருக்கின்றன. அது குறித்து ஆராயும் போது, மேலும் பல உண்மைகள் தெரிய வருகின்றன. இந்தியன் வங்கி ஸ்பான்ஸர் வங்கியாக இருந்த மூன்று கிராம வங்கிகளுக்குள் (பல்லவன், புதுவை பாரதியார், சப்தகிரி) நடந்திருக்கும் முறையற்ற பரிவர்த்தனைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, நமது அகில இந்திய சங்கம் AIRRBEA மத்திய நிதியமைச்சகத்துக்கு இன்று கடிதம் எழுதி இருக்கிறது. அதன் நகலை இங்குத் தருகிறோம். ஊழியர்கள், அலுவலர்கள் மீது இல்லாததும், பொல்லாததுமாய் ஆயிரம் குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஒரு நிர்வாகமே இது போன்ற தவறுகள் செய்வது எந்த வகையில் சேர்த்தி? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருக்கிறது நமது AIRRBEA. நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் மாநில அளவில் இது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது இருக்கும்.
கிராம வங்கிகள் ஆரம்பிக்கும்போது, அதனை நிர்வகிக்க இங்கு அனுபவம் கொண்ட உயரதிகாரிகள் இல்லை எனவே சேர்மன், ஜி.எம் மட்டுமில்லை, சில மேனேஜர்களையும் கூட ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து டெபுடேஷனில் அனுப்பினார்கள். இங்கு தகுதி வாய்ந்த ஆபிஸர்கள் வந்தவுடன் அந்த மேனேஜர்களை ஸ்பான்ஸர் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் கிராம வங்கிகளை நிர்வகிக்க தகுதியான ஆபிஸர்கள் இருந்த போதும் சேர்மனும், ஜீ.எம்மும் போகாமல் இருக்கிறார்கள். கிராம வங்கிகள் ஆரம்பித்து 44 வருடங்களாகி விட்டன. இந்த கிராம வங்கிகளின் தன்மைகளை புரிந்து கொண்டு, இதனை தன் வாழ்நாளெல்லாம் கிராம வங்கிகளையும், அதன் அத்தனை தொழிலாளர்களையும் அறிந்த தகுதியான ஆபிஸர்கள் இருந்தும் அவர்களை பயன்படுத்த மறுப்பது என்ன நியாயம்? முந்தைய பல்லவன் கிராம வங்கியில் AIBOC சங்கத்தைச் சார்ந்தவர்களாயிருந்த ஒரு ஐந்து ஆபிஸர்கள் வழக்குத் தொடுத்து, தங்களை scale V ஆபிஸர்களாக்க வேண்டும் என தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். வழக்குத் தொடுத்த காரணத்தால் மட்டுமல்ல, ஸ்பான்ஸர் வங்கியின் ஜீ.எம் களே scale iv ஆக இருக்கும் போது, நீங்கள் எப்படி scale V ஐக் கேட்கிறீர்கள் என அவர்களை டிரான்ஸ்பர்களில் பந்தாடி இருக்கிறது. AIBOC சங்கம் அவர்களுக்காக குரல் எழுப்பவில்லை. நேற்று நம் AIRRBEAவிலிருந்து அந்த சீனியர் தோழர்களுக்காக (மாற்று சங்கமாக இருந்த போதும்) நாம் நிர்வாகத்திடம் குரல் எழுப்பி இருக்கிறோம். காரணம், கிராம வங்கிகளை நிர்வகிக்க நம் கிராம வங்கியிலிருந்தே தோழர்கள் வரவேண்டும் என்பதற்காக. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் கிராம வங்கிளில் outsourcing யாரென்றால் முதலில் கைகாட்டப்பட வேண்டியது சேர்மனை. அடுத்தது ஜீ.எம்மை. நமது அட்வகேட் தோழர் கீதா அவர்கள் மாநாட்டில், 40 வருடங்கள் ஆகிய பின்னரும், நம்மை ஏந் ஸ்பானஸர் வங்கி நிர்வகிக்க வேண்டும். நீங்கள் ஸ்பான்ஸர் வங்கியின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அதுதான் சுயச்சார்பு என்றார். இப்போது இந்தியன் வங்கியை ஸ்பான்ஸர் வங்கியாகக் கொண்ட கிராம வங்கிகளில் நடைபெற்றிருக்கும் முறையற்ற பரிவர்த்தனைகள் அதை வழி மொழிந்திருக்கின்றன. எனவே உரக்கச் சொல்வோம்- "Delink sponsor banks from RRBs"
J.மாதவராஜ் GS - AIRRBEA, TN& Puduvai