ஒரு மகத்தான வெற்றியோடு நமது amalgamation துவங்குகிறது!


25.03.2019 அன்று சென்னையில் Asst. Labour Commissioner (ALC) முன்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நமது 4 சங்கங்களிருந்தும் 2 வங்கி நிர்வாகத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிர்வாக தரப்பில் ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து 3 பேட்சுகளாக recruitment நடத்துவதாக தெரிவித்தது. நாம் மே மாதத்திற்குள் recruitment நடத்தி முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். நிர்வாகம் டிசம்பர் வரை கால அவகாசம் இருப்பதாக கூறியது. நிர்வாகம் உடன்படவில்லை. அதுதான் நிர்வாகத்தின் நிலைபாடாக இருக்கும் பட்சத்தில் மார்ச் 30 வேலை நிறுத்தம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றோம். நிர்வாகம் இறங்கி வந்தது. இறுதியாக ஜூன் மாதத்திற்குள் recruitment நடத்தி முடிப்பதாக உறுதியளித்தது. அதன் அடிப்படையில் 12(3) செக்‌ஷன் அடிப்படையில் எழுத்துபூர்வ ஒப்பந்தம் லேபர் கமிஷனர் முன்பு கையெழுத்தாகியது. சட்டப்படி இப்போது நமது கோரிக்கை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நமது மார்ச் 30 வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

தோழர்களே!

ஒரு மகத்தான வெற்றியோடு நமது amalgamation துவங்குகிறது.

TNGB யில் தொழிற்சங்க இயக்கத்தின் துவக்கம் உற்சாகமளிக்கிறது.

நிர்வாகம் தன் இஷ்டத்துக்கு recruitment நடத்த அனுமதிக்காமல், கால நிர்ணயம் செய்திருக்கிறோம்.

நமது உறுதிக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி இது.

AIRRBEA zindabad!

Workers unity zindabad!

Pandyan GBOA

Pandyan GBWU

Pallavan GBOU

Pallavan GBEU


14 views0 comments