top of page

Recruitment-ஐ உடனடியாக நடத்த வலியுறுத்தி தொழிற்சங்க இயக்கங்கள்!


தோழர்களே!

10.3.2019 அன்று நமது நான்கு சங்கங்களின் Adhoc கமிட்டி கூடி, இருக்கும் நிலைமைகள் குறித்தும் மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தது.

Recruitment உடனடியாக நடத்தப்பட வேண்டும், amalgamationக்குப் பிறகு நடத்துவதில் பல சிரமங்களையும், பிரச்சினைகளையும், காலதாமதத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என உணரப்பட்டது. இதனால் பெருமளவுக்கு Staffகள் பாதிக்கப்படுவர், எனவே மார்ச் மாதத்திற்குள் recruitment நடத்தப்பட வேண்டும் என நிர்வாகத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கீழ்கண்ட போராட்ட வடிவங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. இந்தியன் வங்கி CMDக்கு பாண்டியன், பல்லவன் கிராம வங்கியிலிருக்கும் நம் உறுப்பினர்கள் மார்ச் 15தேதி கடிதம் அனுப்புவது. அதற்கான formஐ சர்க்குலரோடு இணைத்து உடனடியாக அனுப்புவது.

2. மார்ச் 15லிருந்து மார்ச் 22 தேதிக்குள் முக்கிய நகரங்களில் மொது மக்களுக்கு phamplet கொடுப்பது.

3. மார்ச் 22ம் தேதி பாண்டியன், பல்லவன் கிராம வங்கியில் நமது தோழர்கள் பேட்ஜ் அணிவது.

4. மார்ச் 30ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வது.

இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

ஒற்றுமையால், நம் வலிமையை உறுதி செய்வோம்.

நமது பிரச்சினைகளை தீர்க்க நம்மால் ஆன முயற்சிகள் மேற்கொள்வோம்.

நிலைமைகளை நமக்கு சாதகமாக்குவோம்.

AIRRBEA Zindabad!

Pandyan Grama Bank Officers Association

Pandyan Grama Bank Workers Union

Pallavan Grama Bank Officers Union

Pallavan Grama Bank Employees Union


13 views0 comments
world-spin-crop.gif
bottom of page