top of page

Recruitment-ஐ முன்னிறுத்தி பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் போராட்ட அறிவிப்புக


பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் இன்னேரம் நடந்து முடிந்திருக்க வேண்டிய Recruitment இன்னும் நடக்கவில்லை. இரண்டு நிர்வாகங்களிடமும் நமது சங்கங்கள் பேசிவிட்டன. நமது நான்கு சங்கங்களின் சார்பில் கடிதமும் நிர்வாகங்களுக்கு எழுதப்பட்டு விட்டன. இன்னும் நிர்வாகத்திடம் எந்த அசைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

Amalgamation-க்குப் பிறகு Combined vacancies-ஐ நிரப்பிக் கொள்ளலாம் என இரண்டு கிராம வங்கி நிர்வாகங்களும் சேர்ந்து முடிவு செய்திருப்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. நிர்வாகங்களின் மௌனமும், இவ்விஷயத்தில் காட்டும் அசைவின்மையும் அப்படித்தான் உணர்த்துகிறது.

Amalgamation நடக்க இருக்கும் 01.04.2019-ற்குப் பிறகு, ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்நாடு கிராம வங்கியில் Recruitment நடத்தப்பட வேண்டுமென்றால், முதலில் ஏற்கனவே பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆபிஸர்களுக்குமான inter-seniority இறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால்தான், புதிதாக பணிக்குச் சேர்கிறவர்களுக்கான Seniority மற்றும் Roll No களை தீர்மானிக்க முடியும்.

இந்த Inter-seniority வரையறுப்பதில் பல கசப்பான அனுபவங்களை, ஏற்கனவே ஒன்றிணைக்கப்பட்ட (Amalgamation) அனுபவங்களில் நாம் அறிந்திருக்கிறோம். குழப்பங்கள் நிறைந்து பெரும் காலதாமதம் ஆகி இருக்கிறது. வருடக் கணக்கில் inter-seniority ஐ தீர்மானிக்க முடியாமல் இழுத்தடித்ததும் நடந்ததுண்டு.

அதற்குக் காரணம் Post Amalgamation-ல் ஒன்றிணைக்கப்பட்ட கிராம வங்கி நிர்வாகம் வேறு அலுவல்களுக்கே முன்னுரிமை கொடுக்கும். CBS ஐ ஒன்றிணைப்பது, இரண்டு வங்கியிலும் இருக்கும் வெவ்வேறு scheme-களை ஒன்றிணைப்பது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், மக்களுக்கும் amalgamation குறித்து தெரிவிக்க வேண்டிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும். அப்போது நாம் ‘Recruitment’ குறித்து எவ்வளவுதான் பேசினாலும் எடுபடாது. காதிலேயே வாங்கிக் கொள்ளாது. அப்படியே தள்ளித் தள்ளிப் போய், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் recruitment குறித்து யோசிக்கவே ஆரம்பிக்கும்.

ஆனால் அதற்குள் இங்கு இருக்கும் இரண்டு கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் கடுமையான ஆள் பற்றாக்குறையால் பெரும் அவஸ்தைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக நேரிடும். ஆட்பற்றாக்குறை கிளைகளில் கடுமையாய் தாண்டவமாட, Amalgamation-னால் உருவாகும் புதிய பணிகளையும் சேர்த்து நம் தலைகளில் சுமத்தப்பட, நாம் விழி பிதுங்கிப் போக வேண்டியது இருக்கும். லீவு, டெபுடேஷன் எல்லாம் பெரும் சிரமமானதாக இருக்கும். அருகாமைக் கிளைகளுக்காக காத்திருக்கும் ஊழியர்களின், அலுவலர்களின் Transfer விருப்பங்கள் அனைத்தும் தொலைதூரக் கனவுகளாகி விடும். ‘ஏண்டா இந்த amalgamation வந்தது' என நாமே புலம்ப வேண்டியதாகி விடும். ஆனால் நிர்வாகம் நமது கஷ்டங்கள் குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாமல், அலட்டிக் கொள்ளாமல் தன் காரியங்களை வேகமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கும்.

இந்த மோசமான நிலைமை வந்து விடக் கூடாது என நமது நான்கு சங்கங்களும் கருதுகின்றன. எனவே உடனடியாக Recruitment-ஐ நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. IBPS முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்களுக்கு பணி நியமனப் பட்டியலும் அனுப்பப்பட்டு விட்டது. தேர்வானவர்களுக்கு அழைப்பு விடுத்து, Certificate verification செய்து பணிக்கு அமர்த்தும் ஒரே காரியம்தான் பாக்கி.

இந்தப் பணியைச் செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. ’Amalgamation அறிவிக்கப்பட்டு விட்டதால்…’ என்றெல்லாம் நீட்டி முழக்கத் தேவையில்லை. இதுகுறித்து நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவிடம் கலந்து கொண்டு விளக்கம் பெற்றுள்ளோம்.

தனித்தனி கிராம வங்கிகளின் Board Meetingல் தீர்மானிக்கப்பட்டு, தனித்தனி Indent மூலம் IBPSற்கு கடிதம் எழுதப்பட்டு நடந்த Recruitment-ஐ, amalgamation notification அறிவிக்கப்பட்டாலும், effective date-ற்கு முன்பு தனித்தனியாகவே அந்த recruitment-ஐ தொடரலாம். அதில் ஏற்படும் waiting list-ஐ combined vacancies ஆகக் கருதி amalgamation-ற்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை விதியாக இருக்கிறது.

எனவே, பாண்டியன் கிராம வங்கி நிர்வாகமும், பல்லவன் கிராம வங்கி நிர்வாகமும் உடனடியாக Recruitment Process-ஐ முடித்து, புதிய ஊழியர்களை, ஆபிஸர்களை பணிக்கு எடுக்கும் பணியைச் செய்து முடிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 25ம் தேதி விருதுநகரில் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பும், பிப்ரவரி 28ம் தேதி சேலத்தில் பல்லவன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம் நடத்த நமது நான்கு சங்கங்களும் இணைந்து முடிவு செய்திருக்கின்றன.

இரண்டு கிராம வங்கி நிர்வாகங்கள் இதில் மேலும் மௌனம் சாதிக்குமானால், மேலும் காலம் தாழ்த்தி இழுத்தடிக்க முயற்சிக்குமானால், இந்தப் பிரச்சினையை பொது மக்களிடையே கொண்டு சென்று, ஒரு இயக்கமாக முன்னெடுக்கவும், போராட்டத்தை தீவீரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு கிராம வங்கிகளும் amalgamation ஆக இருக்கிற இந்த நேரத்தில். சகஜமான சூழலையும், இணக்கமான மனநிலையையும் ஏற்படுத்தி, amalgamation-ஐ சுமூகமாக நிறைவேற்றுவது இரண்டு கிராம வங்கி நிர்வாகங்களின் கைகளில்தான் இருக்கிறது.

நாம் முதலில் நமது போராட்டங்களால் ஒன்றிணைக்கப்படுகிறோம்.

ஒன்றுபடுவோம்!

போராடுவோம்!

வெற்றி பெறுவோம்!

AIRRBEA – Zindabad!

PANDYAN GRAMA BANK WORKERS UNION

PANDYAN GRAMA BANK OFFICERS ASSOCIATION

PALLAVAN GRAMA BANK EMPLOYEES UNION

PALLAVAN GRAMA BANK OFFICERS UNION


6 views0 comments
world-spin-crop.gif
bottom of page