கீழ்கண்ட இரு செய்திகளை பல்லவனில் இருக்கும் AIBOC இணைப்புச் சங்கம் தன் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளது.
(1)
Dear Comrades,
Members may be aware of an 'covering letter' being circulated by an composite union (substaff, clerks and officers) for the option to be exercised by employees who have joined on or after 1/4/2010. Government is duty bound to implement Supreme Court orders and and only because of this fact, pension implementation is happening. If in the centempt of court petition filed by few individuals, if any fresh direction from Supreme Court is issued to include all new employees also in the old pension scheme, government will be forced to ask all RRB managements to extend the old pension scheme to all employees. The covering letter is one of the publicity gimmicks that the composite union (comprising substaff, clerks and officers) is regularly doing and will continue to do so.
(2)
Comrades are requested to forward only the forms prescribed by HO for pension option. No letters / requests etc submitted by any of your subordinate as an attachment, to the official forms, can be forwarded
Repeat DO NOT forward any attachment.
-------
இந்த இரண்டு செய்திகளும் அந்த சங்கம் ஒரு தொழிற்சங்கமல்ல என்பதை அழுத்தமாகத் தெரிவிக்கிறது.
கிராம வங்கி ஊழியர்களுக்கு ‘வணிக வங்கி ஊதியம்’ பெற்றுத் தந்த AIRRBEAதான் தொடர்ந்து போராடி வணிக வங்கிக்கு இணையான பென்ஷனை இன்று சாத்தியமாக்கி இருக்கிறது.
கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பும், அதன் அடிப்படையிலான உச்சநீதி மன்ற தீர்ப்பும் தெளிவாக இருந்தபோதும் அதைக் குலைப்பதற்கும், குறைப்பதற்கும் அரசு தன்னால் ஆன குளறுபடித்தனங்களை அதில் செய்தது.
மூத்த தோழர்களுக்கு 1993 லிருந்து வழங்க வேண்டிய பென்ஷனை 1.4.2018 முதல் என அறிவித்தது. இது முதல் மோசடி.
1.4.2010ற்குப் பிறகு பணிக்குச் சேர்ந்த இளம் தோழர்களுக்கு 1.4.2010 முதல் National Pension System (NPS) என அறிவித்தது. இது அடுத்த மோசடி.
நீதிமன்றம் ஏற்கனவே இருக்கும் EPF பென்ஷனை மறுத்து விட்டது. அது காலாவதியாக வேண்டியது. மத்திய அரசு இன்னமும் NPS குறித்த அறிவிப்பையே வெளியிடவில்லை. அதற்கும் Gazzette notification வெளியிட வேண்டும். 2010 முதல் retrospective effectல் NPSஐ அமல்படுத்த முடியாத வகையில் அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. 2010 முதல் Bank Contributionம் Employee Contributionம் ஒன்றாய் இருக்க வேண்டும். Retrospective effectல் அதை எப்படி சமன் செய்ய முடியும்? இதுதான் உண்மை நிலைமை.
அந்தந்த வங்கியிலிருந்து இப்போது அரசு அறிவித்தபடி இளம் தோழர்களிடம் ஆப்ஷன் கேட்கப்படுகிறது. அவர்களுக்கு EPF பென்ஷனா அல்லது NPS பென்ஷனா என அவர்கள் சொல்ல வேண்டுமாம். ஒரு ஆப்ஷன் காலாவதியாகி விட்டது. இன்னொரு ஆப்ஷன் இன்னும் வங்கியிலேயே அறிமுகப்படுத்தவில்லை. இதில் எதை தேர்ந்தெடுப்பது?
சட்ட ரீதியாக இந்த குழப்பத்தை ஆலோசித்துத்தான், AIRRBEA மத்திய நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, ஆப்ஷன் தெரிவிக்கும்போது ஒரு protest letter கொடுக்கச் சொல்லி இருக்கிறது, இப்போது ஆப்ஷன் தெரிவித்தாலும் சட்டரீதியாக நமக்கு எதிர்காலத்தில் அந்த protest letter கேடயமாக இருக்கும்.
தொழிலாளர்கள் நலனில் அக்கறையோடு இருக்கும் ஒரு சங்கம் நிச்சயம் இது போன்ற வழிகளை மேற்கொள்ளூம். AIBOC-ம் இது போன்று தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் வழிகளை ஆராய்ந்திருக்க வேண்டும். அது குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்து விட்டு, இப்போது AIRRBEA protest letter அனுப்பியவுடன், ‘தாங்கள் செய்யத் தவறியதை மறைப்பதற்காக’ அப்படி protest letter எல்லாம் தேவையில்லை, மந்திரத்தில் மாங்காய் காய்த்து விடும் என பிரசங்கம் செய்கிறது.
தங்கள் அலுவலர் உறுப்பினர்களை அனுப்ப வேண்டாம் எனச் சொன்னதோடு அல்லாமல், தங்கள் subordinateகள் அப்படி protest letter தந்தாலும் forward செய்ய வேண்டாம் என்பதெல்லாம் என்ன வகையான சிந்தனையோட்டம்?
தொழிலாளர்களின் உரிமையை தாங்களும் வெளிப்படுத்தாததோடு, வெளிப்படுத்தும் அடுத்தவர்களின் உரிமையையும் மறுக்கும் அளவுக்குத் துணிந்து விட்டது அந்த AIBOC இணைப்புச் சங்கம். இது கடும் கண்டனத்திற்குரியது.
மொத்தத்தில் இளம் தோழர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை எதிர்க்காமல், அவர்களுக்கு வணிக வங்கியில் உள்ளதைப் போல பென்ஷனைப் பெற எந்த முனைப்பும் காட்டாமல், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கிற எந்த ஏற்பாடும் செய்யாமல், துரோகம் இழைக்கிறது AIBOCஇணைப்புச் சங்கம்.
பல்லவன் கிராம வங்கியில் பணிபுரியும் இளம் தோழர்கள் AIBOC சங்கத்தின் அறிவுப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு, தங்கள் ஆப்ஷன் லெட்டரோடு AIRRBEA சார்பில் தரப்பட்டுள்ள protest letterகளையும் சேர்த்து அனுப்புங்கள்.
AIRRBEA-தான்
நம் வழி.
நம் எதிர்காலம்.
J.மாதவராஜ்
General Secretary
AIRRBEA TN & Puduvai