top of page

நாடு முழுவதும் கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்கள் முன்பாக நடந்த தர்ணா!


தோழர்களே!

11.12.2018 அன்று இந்தியா முழுவதும், கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்கள் முன்பாக AIRRBEAவின் அறைகூவலை ஏற்று கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தர்ணா நடந்தது:

1. தற்காலிக ஊழியர்களை நிரந்தப்படுத்துவது

2. உச்சநீதிமன்ற பென்ஷன் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவது

3. புரோமோசன் பாலிசையை உடனே அமல்படுத்துவது

4. வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கைவிடுவது

5. வணிக வங்கிகளில் உள்ளது போன்ற அணைத்து சலுகைகளையும் அமல்படுத்துவது

அரசும், ஆளும் முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாளர்களுக்கு நியாயமாக தர வேண்டிய சலுகைகளை ஒருபோதும், முழுமையாகவும், ஒரே தடவையில் தந்து விடுவதில்லை.

போராட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் என நியாயம் பெறுவதற்கான முறைகள், தொழிலாளர்களுக்கு சாதகமாக குரல் எழுப்பினாலும், அமல் படுத்த வேண்டிய அரசு கொடுக்க மனமே இல்லாமல், எவ்வளவு குறைக்க முடியுமோ, எவ்வளவு குளறுபடிகள் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறது. நியாயமாக பெற வேண்டிய சலுகைகளை பிய்த்து பிய்த்துக் கொடுக்கிறது.

அப்படித்தான், கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கியின் ஊதியமும், அலவன்சுகளும் வழங்கப்பட்டன. ஆனால் முழுமையாகவும், முறையாகவும் பெறுவதற்கு, கொஞ்சம் கூட சளைக்காமல் தொடர்ந்து போராடி, நீதிமன்றங்களில் வழக்காடி, மிக நீண்ட முயற்சிகளை மேற்கொண்டது AIRRBEA. ஒரு சமரசமற்ற, சமூகப் பார்வை கொண்ட தொழிற்சங்கத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆம், தொழிற்சங்கத்தால் மட்டுமே இது சாத்தியம்.

நினைத்துப் பார்க்கும் போது, நாம் தொழிற்சங்கத்தால், பெற்றிருக்கும் நலன்களும், அடைந்திருக்கும் வாழ்வு நிலையும், நிலை நாட்டி இருக்கும் பாதுகாப்பும் அசாதாரணமானது.

இந்த தொழிற்சங்கம் கடந்த 40 ஆண்டுகளாக, கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் அனைவரின் வாழ்விலும் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்கம் இல்லையேல், தொழிலாளர்களின் இன்றைய முன்னேற்றங்கள் இல்லை.

அரசின் சதிகளை அம்பலப்படுத்தி, இன்னும் நமக்கு வந்து சேர வேண்டிய சலுகைகள், நலன்களை பட்டியலிட்டு, முன்னிலைப் படுத்தி போராட்டம் நடந்தது.

தர்ணா என்பது, நமது கோரிக்கைகளை ஊருக்கே உரக்கச் சொல்வது, நியாயம் கேட்பதாகும். அதை பெரும் திரளாக நின்று ஒரே குரலில் சொல்லும்போது, நமது மூச்சில் ஒரு சக்தி பிறக்கும்.

அப்படி பெரும் திரளாக, என்றால், இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக திரள வேண்டும். தொழிலாளர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கலாம், வேறு வேறு மதமும், ஜாதியாகவும் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளும், கோரிக்கைகளும் ஒன்றே. அந்தப் பிரச்சினைகள்தான் நம்மை இணைக்கின்றன. ஒன்றாக திரண்டு நின்றால் தீர்க்க முடியும் என்பதை தெளிவு படுத்துகின்றன.

பாண்டியன் கிராம வங்கி தோழர்களின் தர்ணா

பல்லவன் கிராம வங்கி தோழர்களின் தர்ணா


4 views0 comments
world-spin-crop.gif
bottom of page