top of page

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை மண்டலத்திற்கு நிவாரண நிதி


தோழர்களே!

கஜா புயலால், தஞ்சாவூர் மண்டலத்தின் பல பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதியின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இயல்பான வாழ்க்கையெல்லாம் ஒரே நாளில் தொலைந்து போய் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்,

அப்பகுதி மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வது மனிதாபிமானம் மட்டுமல்ல, சக மனிதராக நமது பொறுப்பும் கடமையுமாகிறது.

தஞ்சாவூரில் உள்ள நம்து தோழர்கள் இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களாக சங்கங்களோடு பேசி வந்தனர். தஞ்சாவூர் மண்டல மேலாளர் நிர்வாகத்துடனும், தொழிற்சங்கங்களோடும் பேசினார்.

அதன் அடிப்படையில், நமது தோழர்களிடம் நிதி வசூலித்து, பாதிக்கப்பட்ட சில பகுதிகளில், அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக DELTA RELIEF FUND என தஞ்சாவூர் கிளை (5217) யில் சேமிப்புக்கணக்கு எண்: 10001 துவங்கப்பட்டுள்ளது. (For online transactions: A/c No. 521701000010001, IFSC Code: IOBA 0 PGB 001)

தோழர்கள் தங்களால் இயன்ற நிதியினை செலுத்தி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

21.11.2018ம் தேதி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நம் இரு சங்கத்தின் தலைவர்களும், தோழர்களும், தஞ்சாவூர் மண்டல மேலாளர், நிர்வாகத்தின் பிரதிநிதிகளோடு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்கள் அளிக்க இருக்கின்றனர்.

எனவே தோழர்கள் உடனடியாக மேற்கண்ட சேமிப்புக்கணக்கில் நிதி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

J.மாதவராஜ் S.நடராஜன்

GS – PGBWU GS – PGBOA


4 views0 comments
world-spin-crop.gif
bottom of page