9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய நமது போராட்டம் மகத்தான வெற்றி!!


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

உற்சாகமான, மகிழ்ச்சியான செய்தி!

நமது போராட்டம் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது!!

இன்று (19.09.2018) பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், PGBOA வையும், PGBWUவையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. மாலை 3 மணிக்கு பேச்சு வார்த்தை துவங்கியது.

நிர்வாகத்தரப்பில் சேர்மன், இரு பொதுமேலாளர்கள் மற்றும் அனைத்துத் துறை முதன்மை மேலாளர்களும் கலந்து கொண்டனர்,

சங்கங்களின் தரப்பில், தோழர்கள் பத்மநாபன், நடராஜன், காமராஜ் (PGBOA), தோழர்கள் சங்கர சீனிவாசன், மாதவராஜ், சங்கர் (PGBWU) கலந்து கொண்டனர்.

நாம் முன்வைத்த 9 கோரிக்கைகள் மீது ,நிர்வாகம் சாதகமான முடிவுகள் எடுத்திருப்பதாகச் சொல்லி, அதன் நிலைபாட்டை முன்வைத்தது. நாம் அதன் மீது விவாதித்தோம். விவாதங்களின் முடிவில் ஒரு புரிந்துணர்வு (Understanding) ஏற்பட்டது.

1. பதவி உயர்வு குறித்து ஸ்பான்ஸர் வங்கியான ஐ.ஓ.பியிலிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், உடனடியாக பதவி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிட்டு, அதற்கான பணிகளை துவக்க இருப்பதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

2. தற்காலிக மெஸஞ்சர்களில் இரண்டாவது கட்டமாக 16 தோழர்களை பணி நிரந்தரம் செய்ய ஐ.ஓ.பியில் இருந்து ஒப்புதல் வந்திருப்பதாகவும், வரும் 26.9.2018 அன்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய இருப்பதாகவும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை வரவேற்ற நாம், பணி நிரந்தரமாகும் 16 பேரையும் சேர்த்து 35 பேருக்கும் 2011ம் ஆண்டிலிருந்து அரியர்ஸ் கொடுக்க வேண்டுமெனக் கேட்டோம். ஏற்கனவே போர்டில், அது குறித்து சாதகமான முடிவு வராததால் மீண்டும் போர்டில் வைத்து, ஒப்புதல் பெற்று, அரியர்ஸ் வழங்க நிர்வாகம் உறுதியளித்தது.

அடுத்தது மீதமுள்ள தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டினோம். மித்ரா கமிட்டியின் பிரகாரம், தேவையான தற்காலிக மெஸஞ்சர்களின் காலியிடங்களை நிர்ணயித்து, அவர்களுக்கு பணி நியமனத்திற்கான பணிகளைத் துவக்க இருப்பதாகவும், அவர்களின் சர்வீஸுக்குரிய weightage கொடுக்கப்பட்டு, பணி நியமனம் செய்ய இருப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

3. ஸ்பான்ஸர் வங்கிக்கு இணையான அலவன்சுகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

ஆபிஸர்களுக்கு officiating allowance ஐ retrospective effect ஆக வழங்க வேண்டும் என்றோம். போர்டில் வைத்து (ஐ.ஓ.பிக்கு அல்ல) வழங்குவதாக ஒப்புக்கொண்டது.

ஆபிஸர்களுக்கு பெட்ரோல் அலவன்சில், பில் கொடுக்காமல் Lumpsum வாங்குபவர்களுக்கு இப்போது குறைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னர் இருந்ததைப் போல அதிக தொகையாக வழங்க வேண்டும் என்றோம். நிர்வாகம் அதனையும் போர்டில் வைத்து ஒப்புதல் பெறுவதாகச் சொல்லி இருக்கிறது.

ஆபிஸர்களுக்கு ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல் Halting allowance தராமல் குறைத்து வழங்குவதாக குறுப்பிட்டு அது சரி செய்யப்பட வேண்டும் என்றோம். நிர்வாகம் அதற்கு ஸ்பான்ஸர் வங்கியின் ஒப்புதல் வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தது.

கிளரிக்கல் தோழர்களுக்கு கேஷியர் அலவன்ஸ், போர்டில் வைத்து ஒப்புதல் பெற்று வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.