16.09.2018 அன்று காலை 10 மணி அளவில் நமது 9 அம்ச கோரிக்கைகளையும், போராட்டங்களையும் விளக்கி, தூத்துக்குடி மண்டலக் கூட்டம் ஹோட்டல் சிட்டி டவரில் நடைபெற்றது. தோழர்களின் திரளான பங்கேற்பில், கூட்டம் மிகுந்த எழுச்சியோடு அமைந்திருந்தது. நிர்வாகத்தின் மீது தோழர்களுக்கு இருந்த அதிருப்தியும், விமர்சனங்களும் உக்கிரத்தோடு வெளிப்பட்டது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.