15.09.2018 அன்று மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் மாலை 6 மணி அளவில் விருதுநகர் மண்டலக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் எதிரான, தொழிற்சங்க விரோதமான நிர்வாகத்தின் உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டது. கோரிக்கைகளை இழுத்தடிக்கிற, பெரும் உழைப்புச் சரண்டல் செய்கிற நிர்வாகத்தின் நடவடிக்கைகள் கடுமையாகச் சாடப்பட்டது. சங்கங்களின் அறைகூவலை ஏற்று, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்களைத் தொடருவது என உறுதி காணப்பட்டது. இந்த கூட்டத்தில் விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.