நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம்!


தோழர்களே!

வணக்கம்.

நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கு குறித்தும், ஊழியர் விரோதப் போக்கு குறித்தும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். கிளைகளில் கடும் பணி நெருக்கடி சிரமப்படுத்துகிறது. முக்கிய கோரிக்கைகள் இழுத்தடிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து PGBOAவும் PGBWUவும் இணைந்து இயக்கம் நடத்துவதென முடிவு செய்து, இரண்டு சங்கத்தின் சப் கமிட்டிகளும் 4.9.2018 அன்று கூடி விவாதித்தன.

2018ற்கான பிரமோஷன் குறித்து அறிவிக்கப்படாதது, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது, நமக்குரிய அலவன்சுகளுக்கு நபார்டையும், ஐ.ஓ.பியையும் கைகாட்டி இழுத்தடிப்பது என அனைத்து முக்கியப் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.

இந்த நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவ்வப்போது நமது எதிர்ப்பை சரிக்கட்டுவது, பிரச்சினைகளை தீர்க்காமல் ஆறப்போடுவது என்னும் தந்திரத்தை கையாள்வதாக அனைவருமே கருதினர்.

எனவே, இனி சமரசமில்லாமல், விட்டுக் கொடுக்காமல் போராடுவது என தீர்மானித்திருக்கின்றன.

அதன் அடிப்படையில் கீழ்கண்ட இயக்கங்களை தோழர்களைத் திரட்டி நடத்துவதென திட்டமிடப்பட்டு இருக்கின்றன.

1. 12.9.2018 அன்று கிளைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிவது. அன்றைய தினம் தலைமையலுவலகத்தில் இரு சங்க செயற்குழு உறுப்பினர்களின் ஒருநாள் உண்ணா விரதம்.

2. கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒவ்வொரு தோழரும் கையெழுத்திட்ட கடிதத்தை நிர்வாகத்துக்கு அனுப்புவது.

3. 18.9.2018 அன்று விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

4. 19.9.2018 அன்று தூத்துக்குடி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

5. 20.9.2018 அன்று திருநெல்வேலி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

6. 25.9.2018 அன்று சிவகங்கை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

7. 29.9.2018 அன்று தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

8. 5.10.2018 அன்று முழு நேர தர்ணா.

9. 6.10.2018 முதல் Work to Rule.

10. 10.10.2018 & 11.10.2018 தலமையலுவலகத்தில் இரு நாட்கள் இரவும் பகலும் காத்திருப்பு போராட்டம்.

11. 29.10.2018 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம்.