16-08-2018 அன்று காவல்துறையை கண்டித்த நமது ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் சோலை மாணிக்கத்தின் ஆவேசமான கோஷங்களுடன் துவங்கியது. PGBOA தலைவர் தோழர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தோழர்கள் கண்ணன், மாரிமுத்து (TNGEA), தோழர் சிவா (DYFI), தோழர் மாரிக்கனி (BEFI) தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அத்துமீரல்களை கடுமையாகச் சாடியும் பேசினர். ஓய்வு பெற்ற சங்க தலைவர்கள் புளுகாண்டி, டி.கிருஷ்ணன் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தோழர் காமராஜ், அறிவுடை நம்பி, அண்டோ கால்பர்ட் (PGBOA), தோழர் மாதவராஜ் (PGBWU) ஆகியோர் காவல்துறையில் முறையற்று நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நமது இயக்கம் தொடரும் என்றனர். தோழர் லூர்து ஆரோக்கியராஜ் நன்றி கூற, வெப்பம் மிகுந்த உணர்வுகளோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
தோழர்களே!
காவல்துறையின் அச்சுறுத்துகிற, அத்து மீறுகிற நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் அனுமதிக்கலாகாது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை சட்டத்தை மீறுவதையும், ‘காவல்துறை உங்களின் நண்பன்' என்று சொல்லிக்கொண்டு மக்களை எதிரிகள் போல நடத்துவதையும் நாம் அனுமதிக்க முடியாது.
நமது குரல் ஜனநாயகத்துக்கானது,
நமது இயக்கம் மனித உரிமைகளுக்கானது.
இதே வெப்பத்தோடும், வேகத்தோடும் தொடருவோம் பயணத்தை…
(GS-PGBOA-PGBWU)