top of page

கேரள மாநில வெள்ள நிவாரணத்திற்காக PGBOAவும், PGBWUவும் இணைந்து நிதியுதவி


தோழர்களே!

நமது அண்டை மாநிலமான கேரளாவை மழையும், வெள்ளமும் உருக்குலைத்துப் போட்டு இருக்கின்றன. உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் கணக்கிட முடியாதவை.

இயற்கையின் பாதிப்பில் அவதிப்படும், அல்லல்படும் கேரள மக்களுக்கு இந்த நேரத்தில் உதவ வேண்டியது மனிதாபிமானமுள்ள அனைவரின் கடமையாகிறது

நமது மாநிலம் சில வருடங்களுக்கு முன் இது போல் பாதிக்கப்பட்டபோது கேட்காமலேயே கேரள கிராம வங்கித் தோழர்கள் உதவினார்கள்.

இப்போது உதவிக்கரம் வேண்டி, கேரள கிராம வங்கித் தோழர்கள் சார்பில், நமது அகில இந்தியத் தலைவர் தோழர் ராஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PGBOAவும், PGBWUவும் இணைந்து ஒரு லட்சம் ருபாய் உடனடியாக அனுப்பி வைத்துள்ளோம்.

நமது மாநில அமைப்பிலிருந்து தோழர்களிடம் வேண்டுகோளை முன்வைத்து, பாண்டியன், பல்லவன், புதுவை பாரதி கிராம வங்கித் தோழர்களிடமிருந்து நிதி உதவி பெற்று, அந்தத் தொகையையும், கேரள கிராம வங்கியில் இருக்கும் நம் சங்கத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம். கேரள கிராம வங்கித் தோழர்கள் அதனை கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைப்பார்கள்.

எனவே நம் மாநிலங்களில் உள்ள அனைத்துத் தோழர்களும் கீழ்கண்ட கணக்கிற்கு உடனடியாக தங்களால் இயன்ற நிதி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது காலத்தினாற் செய்த உதவியாக இருக்கும்!

Pandyan Grama Bank Workers Union

A/c. no. 5187 01 00000 5009

Pandyan Grama Bank, Virudhunagar branch

IFSC: IOBA 0 PGB001 (0-Zero)

(GS-PGBOA-PGBWU)


2 views0 comments
world-spin-crop.gif
bottom of page