தோழர்களே!
இன்று (13-05-2018) பெங்களூரில் நடைபெற்ற நமது அகில இந்திய சங்கத்தின் CC meeting-ல் PGBOA சார்பாக தோழர்கள் காமராஜ், அண்டோ கால்பட் ஆகியோரும் PGBWU சார்பாக தோழர்கள் மாதவராஜ், சரண்யா, வினோத் மற்றும் PGBRRS சார்பில் தோழர்.T.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்லவன் கிராம வங்கியில் இருந்து தோழர் சுரேஷ், பருதிராஜன், ஆனந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க பென்ஷன் தீர்ப்பு வெற்றி கொண்டாடப்பட்டது. நமது அகில இந்திய தலைவர்கள் பென்ஷன் போராட்ட வரலாற்றையும் இவ்வழக்கு நடைபெற்ற விதத்தையும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தனர்.
இவ்வழக்கு மட்டுமின்றி மாகாளிக்கமிட்டியின் பரிந்துரைகளையும் முறியடித்த நமது பிரியத்துக்குரிய வழக்கறிஞர் தோழர்.இராஜகோபால் தமக்கும் AIRRBEA- விற்கும் ஆன உறவையும் இவ்வழக்கின் சுவையான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
தோழர்.அமானுல்லா கான் ( தலைவர்- AIIEA) மிகச்செறிவான உரையொன்றை நிகழ்த்தினர்.
இது கொண்டாட்டங்களுக்கான நேரமென்றும், அகில இந்திய அளவில் பென்ஷன் அனைத்து தரப்பிற்கும் மறுக்கப்படும் சூழலில் AIRRBEA -வின் இவ்வெற்றி புதிய திசைக்கான பெருவெளியை உருவாக்கியுள்ளது என தெளிவாக நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.வெங்கடேஷ்வரரெட்டி விளக்கி உரையாற்றினார்.
மேலும் இத்தீர்ப்பு 1993-ல் வழங்கப்பட்ட வணிக வங்கிக்கு இணையான பென்ஷனை உறுதி செய்கிறது.
மற்றொரு மாபெரும் மகிழ்ச்சியான செய்தி....
இத்தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் வரை கிராம வங்கிகளில் பணிக்கி சேரும், சேர்ந்த அத்தனை இளம் தோழர்களுக்கும் பென்ஷன் வழங்கப்படும்!
குடும்பப் பென்ஷன் உட்பட அனைத்து பென்ஷன்களும் Retrospective effect- உடன் அமலாகும்.
இந்த வகையில் வணிக வங்கிக்கு இணையாக மட்டுமின்றி வங்கித்துறையில் முன்னோடியாக இளம் போராளிகளுக்கும் இப்பென்ஷன் திட்டத்தை நமது அகில இந்திய சங்கம் சாத்தியமாக்கியுள்ளது.
இதோனோடு 1993- சர்வீஸில் இருந்த அனைத்து தோழர்களுக்கும் அரியர்ஸோடு Computer increment வழங்கப்படும்.
இந்த மாபெரும் வெற்றி நம் அனைவராலும் சாத்தியமானது! இது நம் ஒற்றுமைக்கான வெற்றி!