top of page

IBAவுடன் நடந்த 11வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி


05-05-2018 அன்று IBA வுடன் நடந்த 11வது இருதரப்பு பேச்சுவார்த்தையில், மொத்தமே 2% ஊதிய உயர்வுதான் தரமுடியும் என்று சொல்லி இருக்கிறது. United Forum Of Bank Unions (UFBU) அதை முற்றிலுமாக நிராகரித்து வந்து விட்டனர்.

ஊழியர்கள், அலுலர்களைத் திரட்டி, IBAவின் போக்கிற்கு எதிராக போராட அழைப்பு விடுத்திருக்கிறது. 9ம் தேதி தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர்.

நமது AIRRBEAவும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது.

திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, காரைக்குடி, தஞ்சாவூர், இராமநாதபுரம், நாகர்கோவில், தேனி என முக்கிய நகரங்களில் வணிக வங்கி ஊழியர்கள் (UFBU) சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில், நமது தோழர்களும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.


2 views0 comments
world-spin-crop.gif
bottom of page