உணர்வு பூர்வமான போராட்டம்! தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்!


பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக UFRRBU/AIRRBEA வின் அறைகூவலுக்கு இணங்க 26, 27, 28 மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக பாண்டியன் கிராம வங்கியில், மொத்தமுள்ள 322 கிளைகளில் 305 கிளைகள் இன்று (26-03-2018) இயங்கவில்லை. வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி! வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் நம் தோழர்களுக்கு வீரம் செறிந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்!!

இன்று அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், PGBOA மற்றும் PGBWU சங்கத் தோழர்கள் Mass Deputation சென்று மெமொரெண்டம் (Click here to download) கொடுக்கப்பட்டது.

விருதுநகர் மண்டல மேலாளரிடம் Memorandum கொடுக்கப்பட்டபோது.

தூத்துக்குடியில் இன்று வேலைநிறுத்ததை முன்னிட்டு ஆர்பாட்டம் நடத்தி வட்டார மேலாளரிடம் நம் கோரிக்கைகள் அடங்கிய Memorandum கொடுக்கப்பட்டது.

சிவகங்கை மண்டல மேலாளரிடம் PGBOA & PGBWU சார்பாக Memorandum கொடுத்தாகிவிட்டது.

திருநெல்வேலி மண்டல மேலாளரிடம் Memorandum கொடுக்கப்பட்டபோது.