தோழர்களே!
நமது அகில இந்தியச்சங்கத்தின் அறைகூவல்படி, ஏழுகோரிக்கைகளுக்கான தொடர்போரட்டத்தின் இறுதிப்பகுதியாக 20.3.18 அன்று டெல்லியில் தர்ணா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்ணாவுக்கென PGBOAவிலிருந்து தோழர்கள் நடராஜன், பத்மநாபன், காமராஜ், ஆண்டோ, லூர்து ஆரோக்கியராஜ், நாராயணப்பெருமாள் ஆகியோரும், PGBWUவிலிருந்து தோழர்கள் மாதவராஜ், விநோத், தங்கமாரியப்பன், ரமேஷ், மகேஷ் ஆகியோரும், ரிடயர் சங்கத்திலிருந்து தோழர் சோலைமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். டெல்லியில் உரத்த கோஷங்களுடன், நமது தர்ணா ஆரம்பித்தது. அகில இந்திய AIRRBEA தலைவர்களான தோழர் வெங்கடேஸ்வரரெட்டி, தோழர் சயித்கான் ஆகியோர் தர்ணாவை விளக்கி உரையாற்றினர். தெலுங்கானா MP திருமிகு வினோத்குமார் அவர்கள் தர்ணாவை ஆதரித்து பேசினார். அவையில் நமது கோரிக்கைகளை எழுப்புவதாக உறுதியளித்தார். AITUC பொதுச்செயலாளர் டாக்டர் விஜயலட்சுமி தர்ணாவை வாழ்த்திப்பேசினார். தர்ணாவில் பல மாநிலங்களிலிருந்து இளம் தோழர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். நமது கோஷங்கள் மிகுந்த உத்வேகம் மிக்கதாக அமைந்திருந்தது
கிராம வங்கி ஊழியர்களுக்கான மூன்று முக்கிய நிகழ்வுகள் இன்று டெல்லியில் நடைபெற்றது.
1) பென்சன் வழக்கின் வாய்தா
2) மத்திய நிதிமந்திரியுடன் பேச்சுவார்த்தை
3) அகில இந்திய தர்ணா
நாம் நமது கோரிக்கைகளின் வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்!