தோழர்களே!
பாண்டியன் கிராம வங்கியில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்து, பின் ராஜினாமா செய்துவிட்டு வேறு பணிக்குச் செல்வதாய் இருந்தால் கிளர்க்குகள் 1 லட்சம் ரூபாயும், அதிகாரிகள் 2 லட்சம் ரூபாயும் வங்கிக்கு செலுத்த வேண்டும் என போர்டு தீர்மானித்திருப்பதாகவும், அதை இந்த வருடம் புதிதாகப் பணிக்குச் சேர்கிறவர்களிடம் ஒரு bond ஆக கையெழுத்து வாங்க இருப்பதாகவும், நிர்வாகம் PGBOAவுக்கும், PGBWUவுக்கும் இமெயில் அனுப்பி இருந்தது.
நாம் இதனை எதிர்த்தோம். நிர்வாகத்திடம் பேசினோம். அதிகமானவர்கள் இப்படி வங்கியை விட்டுச் செல்கிறார்கள் அதனால் வங்கிப்பணிகளை செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது அதைத் தடுக்கவே இந்த திட்டம் என்பதாகச் சொல்லப்பட்டது.
இந்த வங்கியை விட்டு வேறு வங்கிகளுக்குச் செல்கிறார்கள் என்றால் இங்கு பணி நிலைமைகள் சரியில்லை, கமர்ஷியல் வங்கிகளில் கொடுக்கும் அலவன்சுகளை கொடுக்கவில்லை என்பதுதான் காரணம் அதைச் சரி செய்ய முயற்சியுங்கள். வங்கித் தேர்வு முறைகளில் இருக்கும் கோளாறுகளே முக்கிய காரணம். அதனை சரிசெய்ய யோசியுங்கள். அதை விட்டு, விட்டு இப்படி பணம் பறிப்பது தீர்வாகாது என்று நம் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்படி Bond களில் கையெழுத்து வாங்குவதற்கு RRB Service Rules உங்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை, இது ‘வேலை பார்ப்பதில் சுதந்திரம்’ என்னும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், இதனை அனைத்து வகைகளிலும் முன்னின்று நமது சங்கங்கள் எதிர்த்து முறியடிப்போம் என்று உறுதிபடச் சொன்னோம்.
அதன் அடிப்படையில் நிர்வாகத்துக்கு நமது Protest Letterஐயும் கொடுத்தோம்.
நிர்வாகம் இப்போது பின்வாங்கி இருக்கிறது. Bond வாங்கவில்லை என அறிவித்துள்ளது.
நமது சங்கங்களின் சரியான பார்வைக்கும், தக்க சமயத்தில் நாம் தலையீடு செய்ததற்கும் வெற்றி கிடைத்துள்ளது.