தோழர்களே!
இன்று சென்னையில், நபார்டு Chief General Manager திரு.நாகூர் அலி ஜின்னா அவர்களை AIRRBEA -TN and Puduvai சார்பில் சந்தித்து பேசினோம். தோழர் சையீதுகான் (GS - NFRRBO), தோழர் சி.பி கிருஷ்ணன் (GS - BEFI, TN), தோழர் பத்மநாபன் (President , ARRBEA - TN and Puduvai), தோழர் மாதவராஜ் (GS- AIRRBEA - TN and Puduvai), தோழர் நடராஜன் (GS, PGBOA), தோழர்.நாராயண பெருமாள் (VP - PGBOA) ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். நம்மோடு NABARD Employees Association அகில இந்தியத் தலைவர் தோழர் பாலகிருஷ்ணனும், சென்னை மண்டலைச் செயலாளர் தோழர் பாலாஜியும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் இருக்கிற பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவையில் இயங்கும் புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிலவிம் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் மெமொரெண்டம் கொடுத்து பேசினோம்.
1. மூன்று கிராம வங்கியில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை குறித்து விளக்கினோம். குறிப்பாக புதுவை பாரதியார் கிராம வங்கியில் ஒரு ஆபிஸரே கிளையின் இரண்டு சாவிகளையும், கிளர்க்கின் டம்மி பாஸ்வேர்டையும் பயன்படுத்தும் அவலமான, ஆபத்தான சூழல் குறித்து எச்சரித்தோம். உடனடியாக அதில் தலையிடுவதாக CGM தெரிவித்தார்.
2. வணிக வங்கிக்கு இணையான பல அலவன்சுகள் இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபார்டு டைரக்டர்களிடம் பேசுவதாக CGM தெரிவித்தார்.
3. தற்காலிக மெஸஞ்சர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என நபார்டிலிருந்து ஆர்டர் பிறப்பிக்கப்ப்பட்டு ஒரு வருடமாகியும், மூன்று கிராம வங்கிகளிலும் அதனை அமல்படுத்தவில்லை என்றும் அதன்படி PF பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும், போனஸ் வழங்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தோம்.
அதற்கான அறிவுரைகளை மூன்று கிராம வங்கிகளுக்கும் வழங்குவதாகவும், நடவடிக்கைகள் எடுப்பதாகவும் CGM நம்பிக்கையளித்தார்
4. பல்லவன் கிராம வங்கியில் probation periodல் maternity லீவுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதையும், சட்டப்படி அது தவறு என்பதையும் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றோம். அந்த maternity லீவுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட CGM, அதைத் தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
5. புதுவை பாரதியார் கிராம வங்கியில் categorisation of branches செய்யப்படாமல் இருப்பதையும், அதனால் officiating allowance வழங்காமல் இருப்பதையும் விளக்கினோம். அதனை சரிசெய்யும் அறிவுரை வழங்குவதாக தெரிவித்தார்.
6. புதுவை பாரதியார் கிராம வங்கியில், கோரிக்கைகளை முன்வைத்த நம் சங்கங்களோடு அங்குள்ள நிர்வாகம் பேச மறுப்பதையும், இது தொழிற்சங்க விரோத நடவடிக்கை என்பதையும் முன்வைத்தோம். கண்டிப்பாக சங்கங்களோடு பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்த CGM அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்வதாக நம்பிக்கையளித்தார்.
7. பல்லவன் கிராம வங்கியில் ஒரு கிளையில் பெண் ஊழியர் மீது நடத்தப்பட்ட வக்கிரமான sexual harrassment உண்மை என்று அறிந்த பின்னரும், சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அழுத்தமாக தெரிவித்தோம். தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய CGM உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தார்.
தோழர்களே, இந்த சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. முக்கியமான பேச்சுவார்த்தை என தோழர் சையீதுகான் தனது உணர்வை பகிர்ந்து கொண்டார்
இந்த பேச்சுவார்த்தையின் மீதான நடவடிக்கைகளை follow up செய்வோம். நிலைமைகளை நமக்கு சாதகமாக்குவோம். வெற்றிப் பயணத்தைத் தொடருவோம்!
தோழர். மாதவராஜ்
GS - AIRRBEA TN & Puduvai