தோழர்களே!
நாளை (09.09.2017) மதுரையில் உள்ள College house அரங்கில் நமது பெண் தோழர்களுக்கான பிரத்யேக மாநாட்டை நடத்தவுள்ளோம்.
இதில் நமது சங்கத்தின் (PGBOA) அனைத்து பெண் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இது உங்களுக்கான மாநாடு! உங்களின் திசைவெளிகளை நீங்களே தீர்மானிக்கவிருக்கும் மாநாடு! உங்களின் பங்கேற்பும், கருத்துக்களுமே இம்மாநாட்டை அர்த்தமுள்ளதாக மாற்றும்!
அன்றாடம் கிளைகளில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை பட்டியலிட்டு, பரிசீலித்து அவைகளை எதிர்கொள்ள இம்மாநாடு உதவும்! வங்கி, வேலை என்பதை கடந்து ஒரு விரிவான தளத்தில் நீங்கள் உங்களை இணைத்து கொள்ளவே இம்மாநாடு!
உங்கள் சிறகுகளின் பலத்தை நீங்கள் இம்மாநாட்டில் அறிந்து கொள்வீர்கள். நாளை மற்றொரு நாளாக இல்லாமல் ஒரு புதிய விடியலாய் அமைய நீங்கள் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும்!
தோழமையுடன்,
S.நடராஜன்
(GS- PGBOA)