நமது அகில இந்திய சங்கத்தின் 13வது மாநாடு முதன்முறையாக தமிழ்நாட்டில்!
- TNGBOA AIRRBEA
- Aug 4, 2017
- 1 min read

தோழர்களே!
நமது அகில இந்திய சங்கத்தின் 13வது மாநாடு முதன்முறையாக தமிழ்நாட்டில் நடக்க இருப்பதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.
நவம்பர் 19, 20, 21 தேதிகளில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசம் முழுவதும், அனைத்து மாநிலங்களிலிருந்து 1800 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், 40 லடசத்துக்கும் அதிகமான செலவில் நடக்க இருக்கும் பிரம்மாண்டமான மாநாடு!
மாநாட்டை சிறப்பாகவும், அர்த்தபூர்வமாகவும், அருமையான விருந்தோம்பலோடும் நடத்த வேண்டிய மிகப் பெரும் பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.
நம்மோடு தோளோடு தோளாய் நின்று ஆதரவு தர அரசு ஊழியர் சங்கம், இன்சூரன்சு ஊழியர்கள் சங்கம், ரெயில்வே ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சம்மேளனம், வாலிபர் சங்கம், மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம், மாணவர்கள் சங்கம், மாதர் சங்கம், சி ஐ டி.யூ, போக்குவரத்து ஊழியர் சங்கம் என பல்வேறுத் தொழிற்சங்கங்கள் முன் வந்துள்ளன.
அனைவரையும் அழைத்து, அகில இந்திய மாநாடு குறித்து திட்டமிடவும், வரவேற்புக்குழு அமைக்கவும் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
வரும் 20ம் தேதி, மதுரையில், வானமாமலை நகர், பைபாஸில் அமைந்திருக்கும் EMAR மண்டபத்தில் மாலை 4 மணி முதல் 9 மணி வரை கூட்டம் நடைபெற இருக்கிறது.
தோழர்கள் திரளாக கலந்து கொண்டு, மாநாடு வெற்றியை உறுதிபடுத்துவோம், வாருங்கள்!
J.மாதவராஜ். S.நடராஜன்
GS-PGBWU. GS-PGBOA
Comments